இந்தியாவில் முதன் முறையாகத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விவசாயிகளின் முதலீட்டிற்கு உதவக் கூடிய மானிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.
விவசாயிகளின் சகோதரர் என்ற இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கர் அல்லது அதற்கும் கூடுதலான விவசாய நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 8,000 ரூபாயினை மானியமாக அளிக்க முடிவு செய்துள்ளனர்.
தெலுங்கானா விவசாயிகள்
எனவே தெலுங்கானா விவசாயிகள் இனி ஒவ்வொரு பயிற் பருவத்திற்கு முன்பும் 4,000 ரூபாயினை விதை, உரம், பூச்சி மருந்து மற்றும் பிற பொருட்களை வாங்க முதலீட்டு உதவியாகப் பெற முடியும்.
நிதி ஒதுக்கீடு
தெலுங்கானா முதல்வரான கே சந்திரசேகர ராவ் இந்தத் திட்டத்திற்காக 5,600 கோடி ரூபாய்க்கான காசோலையினை அளித்துள்ளார்.
விவாசாயிகளின் நண்பன் என்ற இத்திட்டத்தின் கீழ் மே 10-ம் தேதி வரை 5,400 கோடி ரூபாயினை விவசாயிகள் பெற்றுள்ளதாகவும், 1.42 கோடி ஏக்கர் நிலங்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறப்பு அதிகாரியான கருணா தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டார்.
நிலம் அளவு பணிகள்
இந்தத் திட்டத்திற்காக நிலங்களை அளக்கும் பணியானது சென்ற ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடைபெற்றுள்ளது. இதில் 72 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.
பருவ காலம்
நவம்பர் மாதம் துவங்கும் ரபி பருவ காலத்திலும் தெலுங்கானா அரசு விவசாயிகளுக்கு 4,000 ரூபாய் உதவித் தொகையினை அளிக்க உள்ளது. மேலும் இந்தத் திட்டத்திற்காக விவசாயிகளுக்குச் சிறப்புப் பாஸ்புக் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளனர்.
வங்கி கணக்கில் பணம் அளிக்கப்படாது?
எப்படி?
விவசாயிகளுக்குத் தெலுங்கானா அரசு அளிக்கும் இந்த உதவித் தொகையானது வங்கி கணக்கு மூலம் அளிக்கப்படாது என்றும் செக் மூலமாகத் தான் ஆளிக்குப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் ஏற்கனவே வங்கிகளில் கடன் பெற்று அதனைச் செலுத்தாமல் இருக்கும் நிலையில் முதலீட்டு உதவியாக அளிக்கப்படும் இந்தப் பணத்தினை வங்கிகள் தங்களது கடனுக்கு எடுக்க வாய்ப்புள்ளது. எனவே காசோலை வழியாகத் தான் நிதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கேசிஆர்
2018-2019 நிதி ஆண்டில் இந்தத் திட்டத்திற்காக 12,000 கோடி ரூபாயினை ஒதுக்க உள்ளதாகத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாடு
தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரச் சேவை வழங்குவது போன்று தெலுங்கானாவிலும் 24 மணி நேரம் மின்சாரம் வழங்க 1,000 கோடி ரூபாயினைக் கேசிஆர் ஒதுக்கியுள்ளார். இது போன்ற திட்டங்களைத் தமிழக அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்தால் தமிழ் நாட்டு விவசாயிகளும் பயன்பெறுவார்கள்
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications