வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் காலை முதல் மந்தமாக இருந்த மும்பை பங்குச்சந்தை மாலையில் சரிவில் இருந்து மீண்டது, இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 50 புள்ளிகள் வரையில் மட்டுமே உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம் மற்றும் அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி உயர்வு பாதிப்புகள் இன்னமும் சந்தையில் இருந்து மீளாத நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்தது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 22.32 புள்ளிகள் உயர்ந்து 35,622.14 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 9.65 புள்ளிகள் உயர்ந்து 10,817.70 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டாக்டர் ரெட்டி, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் 3 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வை அடைந்தது. இதை தொடர்ந்து டிசிஎஸ், சன்பார்மா, ரிலையன்ஸ், கோட்டாக் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பார்தி ஏர்டெல் ஆகியவை கணிசமான உயர்வை அடைந்தது.


Click it and Unblock the Notifications