இந்திய வங்கித்துறை தற்போது வராக்கடன் மற்றும் ரிசர்வ் வங்கியின் கடுமையான கணக்கீடு முறைகள் மூலம் பெரிய அளவிலான வர்த்தகம் மற்றும் வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பாதிப்புகள் நாட்டின் முன்னணி தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மத்தியில் சற்று அதிகமாகவே உள்ளது.
இதன் எதிரொலியால் தனியார் வங்கி நிர்வாகங்கள் வங்கியின் சிஇஓக்களுக்குச் சம்பளம் உயர்வு அளிக்க மறுத்தது மட்டும் அல்லாமல் கடந்த நிதியாண்டை விடவும் குறைவான சம்பளத்தை அளித்துள்ளது. இந்நிலையில் தனியார் வங்கித்துறையில் சம்பள உயர்வு பெற்ற ஒரேயொரு தலைவராகக் கோட்டக் மஹிந்திரா வங்கியின் சிஇஓ உதய் கோட்டக் திகழ்கிறார்.
உதய் கோட்டக்
கோட்டாக் மஹிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோட்டாக் 2018ஆம் ஆண்டில் 11.02 சதவீத சம்பள உயர்வுடன் 2.92 கோடி ரூபாய் சம்பளத்தைப் பெற்றுள்ளார். கடந்த நிதியாண்டில் இதன் அளவு 2.63 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
குறைவான சம்பளம்
அதேபோல் இந்திய தனியார் வங்கித் துறையில் குறைவான சம்பளம் வாங்கும் தலைவர்களில் உதய் கோட்டக் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யெஸ் வங்கி
யெஸ் வங்கி தலைவர் ரானா கபூர் பங்கு மதிப்பு இல்லாமல் அவரது சம்பள தொகை 22.12 சதவீதம் வரையில் குறைந்து 2018இல் 5.53 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்றுள்ளார். 2017இல் இவர் 6.87 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
ஹெச்டிஎப்சி வங்கி
நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியினா ஹெச்டிஎப்சி வங்கியின் தலைவர் ஆதித்யா பூரி அவர்களின் மொத்த சம்பளம் 10.05 கோடி ரூபாயில் இருந்து 9.64 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
இதில் இவரது சம்பள அளவீடு வருட அடிப்படையில் 10.59 சதவீதம் குறைந்துள்ளது.
ஆக்சிஸ் வங்கி
டிசம்பர் மாதம் ஆக்சிஸ் வங்கியை விட்டு வெளியேறும் சிக்கா சர்மா 2018ஆம் ஆண்டில் 4.77 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளார், இது கடந்த வருடம் இவர் வாங்கி 5.39 கோடியில் 11.5 சதவீதம் குறைவாகும்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
எஸ்பிஐ வங்கி தலைவர் ராஜ்னிஷ் குமார் அக்டோபர் 2017இல் பதவியேற்றிய நிலையில் 2018ஆம் ஆண்டுக்கான சம்பளமாக 14.25 லட்சம் ரூபாய்ப் பெற்றுள்ளார்.
அதேபோல் முன்னாள் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யா, ஏப்ரல் - அக்டோபர் 2017 வரையிலான காலத்திற்கு 14.69 லட்சம் ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளார்.
முக்கிய வங்கிகள்
மேலும் இன்டஸ்இந்த் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி இன்னமும் அதன் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட சம்பளம் பற்றி முழுமையான விபரங்களை அளிக்கவில்லை.


Click it and Unblock the Notifications