விப்ரோ-வை துரத்தும் ஹெச்சிஎல்.. ஷிவ் நாடார் அதிரடி..!

இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு 167 பில்லியன் டாலர் மதிப்பிலான மென்பொருள் வர்த்தகம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என்றால் மிகையாகாது. கடந்த 10 வருடத்தில் இத்துறையில் டாப் 3 இடங்களில் டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை நிறுவனங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

இந்த 167 பில்லியன் டாலர் சந்தையில் கடைசியாக நடந்த மாற்றம் 10 வருடங்களுக்கு முன்பாக, சத்யம் கம்பியூட்டர் சிஸ்டம்ஸ் 2009இல் மோசடி வழக்கில் சிக்கிய பின்பு ஹெச்சிஎல் பெரிய அளவில் வளர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 2018இல் தமிழரான ஷிவ் நாடார் டாப் 3 இடத்தில் நிச்சயம் ஹெச்சிஎல் இடம் பெறும் என உறுதியாகக் கூறியுள்ளார்.

விப்ரோ Vs ஹெச்சிஎல்

விப்ரோ Vs ஹெச்சிஎல்

நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் பட்டியலில் விப்ரோ 3வது இடத்திலும், ஹெச்சிஎல் 4வது இடத்திலும் உள்ளது. கடந்த 5 வருடத்தில் ஹெச்சிஎல் செய்த அதிரடி மாற்றங்கள், போராடிப் பெற்ற புதிய ஆர்டர்கள், திட்டமிட்டுக் கைப்பற்றிய நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் இன்றும் விப்ரோ நிறுவனத்தின் இடத்தை ஹெச்சிஎல் பிடிக்கும் நிலையில் உயர்ந்துள்ளது.

வருவாய் வித்தியாசம்

வருவாய் வித்தியாசம்

5 வருடத்திற்கு முன்பு விப்ரோ மற்றும் ஹெச்சிஎல் நிறுவனங்களுக்கு மத்தியிலான காலாண்டு வருவாய் வித்தியாசம் 359.2 மில்லியன் டாலராக இருந்தது. ஆனால் 2018 ஜனவரி - மார்ச் காலாண்டில் இதன் அளவு வெறும் 24 மில்லியன் டாலரா குறைந்துள்ளது.

2018ஆம் நிதியாண்டில் ஹெச்சிஎல் வருடாந்திர வருவாய் அடிப்படையில் 50,000 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய மைல்கல்-ஐ எட்டியுள்ளது.

 

 ஷாப்பிங்

ஷாப்பிங்

ஹெச்சிஎல் நிறுவனம் கடந்த 2 வருடத்தில் மட்டும் வர்த்தக வளர்ச்சிக்காகவும், புதிய பிரிவுகளில் சேவை அளிக்கும் நோக்கத்துடனும் சுமார் 8 நிறுவனங்களை வாங்கியுள்ளது.

மறுபுறம் 4 வருடத்தில் 4 நிறுவனங்களை வாங்கியுள்ளது, இன்போசிஸ் 2008இல் இருந்து 9 நிறுவனங்களை மட்டுமே வாங்கியுள்ளது, இதில் விப்ரோ 10 நிறுவனங்களை வாங்கியுள்ளது.

 

கிளவுட் சேவை

கிளவுட் சேவை

தற்போது டெக் துறையில் கிளவுட் சேவைக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால் ஹெச்சில் ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் ஹைப்ரிட் கிளவுட் சேவை அளிக்கும் ஆக்டியன் என்னும் நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளைச் சுமார் 330 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது.

இப்படித் துறைவாரியாக, பிரிவு வாரியாக ஹெச்சிஎல் நிறுவனங்களைக் கைப்பற்றி வர்த்தகத்தை மிகவும் குறைந்த காலகட்டத்தில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.

 

விப்ரோ கைப்பற்றிய நிறுவனங்கள்

விப்ரோ கைப்பற்றிய நிறுவனங்கள்

2008 முதல் மார்ச் 2018 வரையிலான காலத்தில் விப்ரோ கைப்பற்றிய நிறுவனங்களும் அதன் துறை சார்ந்த வர்த்தகமும்.

சிட்டி டெக்னாலஜிஸ் சர்வீசஸ் (மென்பொருள் சேவை)
குளோபல் ஆயில் அண்ட் கேஸ் ஐடி சர்வீசல் (எனர்ஜி நிறுவனங்களான மென்பொருள் சேவை)
ATCO I-tek (என்டர்பிரைஸ் அசர்ட் மேனேஜ்மென்ட்)
டிசைன்இட் (டிசைன் திங்கிங்)
ஹெல்த்பிளான் சர்வீச்ஸ் (ஹெல்த்கேர் துறைக்கான டெக் சேவைகள்)
ஆப்பிரியோ (கிளவுட் டெக் சேவை)
இன்போசர்வர்
கூப்பர் (டிசைன் திங்கிங்)
ஹார்டே ஹேங்க்ஸ் (மார்கெட்டிங் டெக்னாலஜி)
டெனிம் குரூப் (அப்பிளிகேஷன் செக்யூரிட்டி)

 

ஹெச்சிஎல் கைப்பற்றிய நிறுவனங்கள்

ஹெச்சிஎல் கைப்பற்றிய நிறுவனங்கள்

2011 முதல் ஏப்ரல் 2018 வரையில் ஹெச்சிஎல் கைப்பற்றிய நிறுவனங்களின் முழுமையான பட்டியல்

ஆக்சான் குரூப் (SAP)
கான்சப்ட் டூ சிலிக்கான் சிஸ்டம்ஸ் (என்ஜினியரிங் சர்வீசஸ்)
பவர்ஆப்ஜெக்ட்ஸ் (அப்பிளிகேஷ்ன் டெவலப்மென்ட்)
பாயின்ட் டு பாயின்ட் (விர்ச்சுவலைசேஷன்)
ஜியோமெட்ரிக் (என்ஜினியரிங் சர்வீசஸ்)
பட்லர் அமெரிக்கா ஏரோஸ்பேஸ் (ஏரோஸ்பேஸ், டிபென்ஸ் சேவைகள்)
அர்பன் புல்பில்மென்ட் சர்வீசஸ் (பிபிஓ மற்றும் டெரிட் சர்வீசிங்)
ஆல்பா இன்சைட் (பிஸ் ப்லோ மானிடரிங் அண்ட் ஆப்ஸ் இன்டலிஜென்ட்)
டேட்டாவேர் (டேட்டா ஆட்டோமேஷன் பிளாட்பார்ம்)
சி3ஐ சொல்யூஷன்ஸ் (லைப் சையின்ஸ் அண்ட் கன்ஸ்யூமர் சர்வீசஸ்)
ஆக்டியன் கார்ப்பரேஷன் (ஹைப்ரிட் டேட்டா, கிளவுட் அண்ட் அனலிட்டிக்ஸ்)

 

3வது இடத்தில் ஹெச்சிஎல்

3வது இடத்தில் ஹெச்சிஎல்

பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த பல நிறுவனங்களை ஹெச்சிஎல் கைப்பற்றிய நிலையில் தற்போது இந்நிறுவனத்தின் அனைத்து வர்த்தகப் பிரிவும் வலிமையாகவும், பெரியதாகவும் விளங்குகிறது. இதனால் புதிய வர்த்தக வாய்ப்புகளைப் பெற ஹெச்சிஎல் நிறுவனத்திற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

ஆனால் விப்ரோ நிறுவனம் வர்த்தகத்தில் தொடர்ந்து மந்தநிலையைச் சந்திக்கிறது.

 

 தொடர்ந்தால்...

தொடர்ந்தால்...

இதே நிலையை இரு நிறுவனங்களிலும் தொடர்ந்தால் அடுத்தச் சில காலாண்டுகளிலேயே விப்ரோவை பின்னுக்குத் தள்ளி ஹெச்சிஎல் இந்தியாவின் மிகப்பெரிய 3வது மென்பொருள் நிறுவனமான உருவெடுக்கும்.

ஆல் தி பெஸ்ட் ஷிவ் நாடார்...!

 

ஐடி துறையை புரட்டிப் போட்ட அப்பாவும்.. மகளும்..!

ஐடி துறையை புரட்டிப் போட்ட அப்பாவும்.. மகளும்..!

 

 

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+