கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு முதல் டெலிகாம் சேவை வரையில் இயங்கிக்கொண்டு இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வியாழக்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனப் பங்குகள் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது.
வரலாற்று உச்சம்
கடந்த ஒரு வருடமாக இந்நிறுவனப் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்றைய வர்த்தகத்தில் வரலாறு காணாத விதிமாக ஒரு பங்கின் மதிப்பு 1,031 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதே ஜூன் 21இல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஒரு பங்கு விலை 709 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிலையான வர்த்தகம்
ஜியோ அறிமுகத்திற்குப் பின் தொடர்ந்து உயர்ந்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் 2017 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் சில ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தாலும் ஒரு பங்கின் விலை 900 ரூபாய்க்கும் அதிகமாகவே வர்த்ததம் செய்யப்பட்டு வந்தது.
ஜியோ மற்றும் ரீடைல்
இந்நிலையில் தற்போது ஜியோ இன்போகாம் மற்றும் ரீடைல் வர்த்தகப் பிரிவை தனியாகப் பிரித்துப் பங்குச்சந்தையில் பட்டியலிட உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதை அடுத்து இந்நிறுவனப் பங்குகள் கடந்த சில வாரமாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
எதிரொலி
இதன் எதிரொலியாகவே இன்று மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் 1,031 ரூபாய் என்ற அளவை அடைந்துள்ளது.
இலக்கு
இதன் மூலம் அடுத்தச் சில வாரதத்தில் அன்னிய முதலீடு மற்றும் ரூபாய் மதிப்பு உயரும் பட்சத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1,100 முதல் 1,150 வரையில் உயரும் எனக் கணிப்புகள் வெளியாகி இந்நிறுவனத்திற்குப் புதிய இலக்கு நிர்ணயம் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications