இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி 2017 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்த நிலையில் நாளையோடு ஒரு வருடம் முடிவடை போகிறது. ஜிஎஸ்டி-ஐ வெற்றிகரமாக அமலுக்குக் கொண்டு வந்து மோடி அரசு இதனை ஜிஎஸ்டி தினமாக 2018 ஜூலை 1 அன்று கொண்டாட முடிவு செய்துள்ளது.

இந்த ஜிஎஸ்டி தின கொண்டாட்டத்தில் தற்காலிக மத்திய நிதி அமைச்சரான பியூஷ் கோயல் தலைமை தாங்க பிற மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்ற உள்ளனர் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததன் மூலம் 12-க்கும் மேற்பட்ட மத்திய மாநில வரிகள் நீக்கப்பட்டு நாடு முழுவதும் ஒரே வரி என்ற நிலையில் உருவாகியுள்ளது.
இ-வே பில் சேவை அறிமுகம் செய்ததன் மூலம் மாநில எல்லைகளில் உள்ள சுங்க சாவிடிகளில் வாகனங்கள் வரிசையாக நிற்பதில் இருந்து விலக்கு பெற்றுள்ளது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்து ஒரு வருடம் ஆன பிறகும் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டி உள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யப்பட்டு வரும் இணையதளமான ஜிஎஸ்டிஎன் இன்று வரை சரிவர இயங்காமல் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications