2018-2019 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்த போது அருண் ஜேட்லி அவர்கள் பருவ காலப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையினை உயர்த்தி அளிப்போம் என்று அறிவித்து இருந்த நிலையில் அதற்கு மத்திய அமைச்சகம் இன்று அனுமதி அளித்துள்ளது.
மத்திய அமைச்சர்கள் இடையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் நெல் மீதான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒரு குவிண்டாலுக்கு 200 ரூபாய் வரை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நெல்
தற்போது நெல் மீதான குறைந்தபட்ச ஆதரவு விலையானது 1,550 முதல் 1,590 ரூபாய் வரை உள்ள நிலையில் அதனை 200 ரூபாய் வரை உயர்த்தி 1,750 ரூபாயாக அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சு
குவிண்டால் பஞ்சுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையானது 5150 முதல் 4,020 ரூபாய் வரை பஞ்சின் தரத்தினைப் பொருத்து அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 5,450 முதல் 4,320 ரூபாய் உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பருப்பு வகைகள்
பருப்பு வகைகள் மீதான குறைந்தபட்ச ஆதரவு விலையினையும் 400 ரூபாய் வரை உயர்த்தி அளிக்க மத்திய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
மோடி அரசு
விவசாயிகளின் வருவாயினை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தக் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு முடிவினை எடுத்துள்ளது.
பட்ஜெட்
2018-2019 நிதி ஆண்டின் பட்ஜெட்டினை தாக்கல் செய்த போது 1.5 மடங்கு வரை விவசாயப் பொருட்களுக்கான ஆதரவு விலையினை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து இருந்தனர்.
குறைந்தபட்ச ஆதரவு விலை
மறு பக்கம் விவசாயப் பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையினை உயர்த்தி அளிப்பதால் ஏற்றுமதி செய்யப்படுவது குறையும் என்றும், அதனை விடப் பிற வழிகளில் விவசாயிகளின் வருவாயினை எப்படி உயர்த்துவது என்பதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
விவசாயிகளின் வருவாயினை இரட்டிப்பாக்குவது எப்படி?
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications