சரக்கு மற்றும் சேவை வரியான ஜிட்ஸ்டி அமலுக்கு வந்து ஒரு வருடம் முடிவடைந்துள்ள நிலையில் ஜிஎஸ்டி தொழில்நுட்பம் தோல்வி அடைந்துள்ளதை நிதி அமைச்சா செயலாளரான ஹஸ்முக் ஆதியா ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜிஎஸ்டி தொழில்நுட்பத்தினை சிறப்பாக செயல்படுத்த கடினமாக உழைத்து வரும் நிலையிலும் அது சில நேரங்களில் தோல்வி அடைந்தே வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்போசிஸ்
ஜிஎஸ்டி தொழில்நுட்பத்தினை இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் உருவாக்கியது மட்டும் இல்லாமல் புதுப்பித்து மெறுகேற்றும் பணிகளையும் செய்து வருகிறது.
ஜிஎஸ்டிஎன்
இன்போசிஸ் உருவாக்கிய ஜிஎஸ்டிஎன் பயன்பாட்டின் கீழ் தான் ஜிஎஸ்டிஎன் பதிவு, ரசீதுகள் பதிவேற்றுவது, வரி தாக்கல் மற்றும் பணம் செலுத்துவது போன்ற சரக்கு மற்றும் சேவை வரியின் அனைத்து செயல்பாடுகள் இயங்கி வருகிறது.
ஏன் தோல்வி
ஜிஎஸ்டி வரி ஆட்சி முறையினை குறைந்த காலகட்டத்திற்குள் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் இருந்து, எனவே தொழில்நுட்பத்தினை முழுமையாகத் தயார் செய்வதற்கான நேரம் போதுமானதாக இல்லை எனவே தான் இந்தத் தோல்விகள் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி தொழில்நுட்பத்தினை உருவாக்கும் பணிகளில் அற்புதமான நபர்கள் எல்லாம் செயல்பட்டு வரும் நிலையில் அவர்களது முயற்சிகள் இன்று வரை தோல்வியிலேயே முடிந்து வருகிறது என்றும் நிதி அமைச்சக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எளிமை
ஜிஎஸ்டி வரி முறையினை தொழில்நுட்பங்கள் மூலம் மிகப் பெரிய அளவில் எளிமைப்படுத்த முடியும். தற்போது பல வகையில் அதனை எளிமைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அதில் மேலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியதும் உள்ளது.
வணிகங்கள் பாதிப்பு
2017 ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்து ஒரு வருடம் முடிவடைந்த நிலையிலும் 50 சதவீத வணிக நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு இன்னும் திரும்பவில்லை என்று ஆய்வு அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ஜிஎஸ்டி வந்த பிறகு வேலைகள் கூடியுள்ளது மற்றும் அதிக நேரம் செலவாகிறது என்றும் பல வணிகங்கள் கூறுகின்றனர்.
எதிர்பார்ப்பு
ஜிஎஸ்டி-ல் இன்னும் சிக்கல்கள் இருந்தாலும் வெற்றிகரமாக 2 வது ஆண்டில் நுழைந்துள்ள நிலையில் விரைவில் ஒற்றை வரி தாக்கல் போன்ற எளிமைப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தும் என்று வணிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறனர்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications