தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் எவை என்ற மூன்றாம் பதிப்பை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையிடம் உள்ள தரவுகளின் படி இந்தப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.
தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் ஜார்கண்ட், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னிலை பிடிக்கும் என்று எதிர்பார்த்துப் போன்று ஆந்திரா முதல் இடத்தினைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ் நாடு மற்றும் பிற மாநிலங்களின் நிலை என்ன என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
2வது & 3வது இடம்
தொழில் துவங்க மற்றும் செய்ய ஏற்ற மாநில பட்டியலில் தெலுங்கானா அரசு இரண்டாம் இடத்தினைப் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தினை ஹரியானா பிடித்துள்ளது.
4 மற்றும் 5வது இடம்
தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் முதலாம் இடத்தினைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜார்கண்ட் 4 வது இடத்தினையும், குஜராத் 5 வது இடத்தினையும் பிடித்துள்ளது.
6 & 7வது இடங்கள்
தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் சட்டிஷ்கர் 6வது இடத்தினையும், மத்திய பிரதேசம் 7வது இடத்தினைப் பிடித்துள்ளது.
8 மற்றும் 9வது இடங்கள்
இந்தியாவின் சிலிகான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு அமைந்துள்ள கர்நாடகா தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் 8வது இடத்தினைப் பிடித்துள்ளது.
ராஜஸ்தான்
தொழில் துவங்க மற்றும் செய்ய ஏற்ற மாநில பட்டியலில் ராஜஸ்தான் 9வது இடத்தினைப் பிடித்துள்ளது.
தமிழ் நாடு
ஒரு காலத்தில் இந்தியாவில் தொழில் துவங்க ஏற்ற மாநிலங்களில் முதல் 5 இடத்திற்குள் இருந்து வந்த தமிழ் நாடு 15 வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
10-14 வது இடம் பிடித்த மாநிலங்கள்
மேற்கு வங்கம் - 10 வது இடம்
உத்தர்காண்ட் - 11 வது இடம்
உத்திர பிரதேசம் - 12 வது இடம்
மகாராஷ்டிரா - 13 வது இடம்
ஒதிஷா - 14வது இடம்
வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்கள்
இமாசல் பிரதேசம் - 16வது இடம்
அசாம் - 17வது இடம்
பீகார் - 18வது இடம்
கோவா - 19வது இடம்
பஞ்சாப் - 20வது இடம்
உலக வங்கி
தொழில் துவங்க ஏற்ற 190 நாடுகளில் பட்டியலில் இந்தியா 100வது இடத்தினை பிடித்துள்ளதாக அன்மையில் உலக வங்கி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு
மத்திய அரசு உலக வங்கி வெளியிட்ட தொழில் துவங்க ஏற்ற 190 நாடுகளில் பட்டியலில் இந்தியா 50 வது இடத்திற்குள் வர வேண்டும் என்று முழூவீச்சாக செயல்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications