கோச்சடையான் திரைப்படத்திற்குக் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற வழக்கில் லதா ரஜினிகாந்த் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையினை ரத்துச் செய்ய முடியாது என்றும் விசாரணைகளுக்கு ஆஜர் ஆக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோச்சடையான் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக லதா ரஜினிகாந்த் இயக்குநராக இருக்கும் மீடியா ஒன் குலோபள் எண்டர்டெயின்மெட் லிமிடட் நிறுவனம் ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவனத்திடம் இருந்து 14.90 கோடி ரூபாயினைக் கடனாகப் பெற்றது. அதில் தற்போது வரை 6.20 கோடி ரூபாயினை மீடியா ஒன் திருப்பிச் செலுத்தவில்லை.
ஆட் பியூரோ
ஆட் பியூரோ நிறுவனமானது மிடியா ஒன் நிறுவனத்தில் லதா ரஜிகாந்தும் ஒரு இயக்குனர் என்பதால் அந்தக் கடனிற்காகப் பொறுப்பினை அவர் ஏற்றுக் கடனை அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வாதாடியுள்ளது.
லதா ரஜினிகாந்த்
ஆனால் லதா ரஜினிகாந்த மீடியா ஒன் நிறுவனத்திற்கு எனக்கும் எந்தச் சமந்தமும் இல்லை என்று கூறிவருகிறார். தற்போது இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை மீதான விசாரணையினை மீண்டும் தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம்
பிப்ரவரி மாதமே உச்ச நீதிமன்றம் மீடியா ஒன் நிறுவனம் 6.20 கோடி ரூபாயினை ஆட் பியூரோ நிறுவனத்திற்கு 12 வாரங்களில் செலுத்த வேண்டும் என்றும், லதா ரஜினிகாந்த் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் உத்தரவிட்டு இருந்தது.
தீர்ப்பை மதிக்காத லதா ரஜிகாந்த்
லதா ரஜிகாந்த் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மதிப்புக் கடனை அடைக்காததால் ஜூலை 3-ம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஜூலை 10-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்றைய விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கோச்சடையான்
கோச்சடையான் திரைப்படம் 2014-ம் ஆண்டுச் சவுதர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியானது. ஒளிச்சேர்க்கை பிடிப்புத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தினை எடுக்க 1.25 கோடி ரூபாய் மட்டுமே செலவானது என்றும் கிராப்பிக்ஸ், வெளியீடு மற்றும் விளம்பரத்திற்காகத் தான் 14.90 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications