இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷ்னல் வங்கி 2017-2018 நிதி ஆண்டில் வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்கவில்லை என்றும் 151.66 கோடி ரூபாய் அபராதம் தெரிவித்துள்ளது.
ஆர்டிஐ
சந்திர சேகர் கவுட் என்ற ஆர்டிஐ ஆர்வலர் பஞ்சாப் நேஷ்னல் வங்கியிடம் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை நிர்வகிக்கவில்லை என்று 2017-2018 நிதி ஆண்டில் எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டது என்று கேள்வி கேட்டுள்ளார்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
இந்த ஆர்டிஐ கேள்விக்குப் பதில் அளித்துள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி 2017-2018-ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 31.99 கோடியும், இரண்டாம் காலாண்டில் 29.43 கோடியும், மூன்றாம் காலாண்டில் 37.27 கோடியும், 4-ம் காலாண்டில் 52.97 கோடியும் குறைந்தபட்சம் இருப்புத் தொகையினை நிர்வகிக்காத சேமிப்புக் கணக்குகளில் இருந்து அபராதமாக வசூலித்துள்ளதாக்க தெரிவித்துள்ளது.
அபராதம் எவ்வளவு?
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மெட்ரோ நகரங்கள், புற நகர் மற்றும் நகரப் பகுதிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் ஒவ்வொரு காலாண்டும் 2000 ரூபாயும், கிராமப்புற கிளை வாடிக்கையாளர்கள் 1000 ரூபாயும் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்க வேண்டும். அப்படிச் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினைச் சேமிப்புக் கணக்குகளில் நிர்வகிக்கவில்லை என்றால் 25 முதல் 250 ரூபாய் வரை கிளைகளுக்கு ஏற்றவாறு அபராதமாகச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ
இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ 2017-2018 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மட்டும் 1771 கோடி ரூபாயினைக் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்காத வங்கி கணக்குகள் மூலம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் 2017-ம் ஆண்டு முதல் குறைந்தபட்ச இருப்புத் தொகை நிர்வகிக்காத சேமிப்புக் கணக்குகள் மீது அபராதம் விதிக்கத் துவங்கியதில் இருந்து மூன்று முறை அதனை எஸ்பிஐ வங்கி மாற்றியும் அமைத்தது.


Click it and Unblock the Notifications