மகாராஷ்டிரா மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் விவசாயிகளின் பெயரில் ஐயாயிரத்து 400 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. விவசாயிகள் செய்ய முடியாததை பெரும் பணக்காரர்கள் செய்ய முடியும் என்பதை அவர் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
யார் அவர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பர்பானி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்னாகர் குட்டே. கங்காகெட் சுகர் மற்றும் எரிசக்தி நிறுவனம் என்ற பெயரில் சர்க்கரை ஆலையை நடத்தி வருகிறார்
விவசாயிகள் பெயரில் மோசடி
அறுவடை மற்றும் போக்குவரத்து திட்டங்களின் மூலம்,2015 ஆம் ஆண்டு 600 விவசாயிகளின் பெயரில் கடன் பெற்றுள்ளார். ஒரு விவசாயியின் பெயரில் 25 லட்ச ரூபாய் வீதம் ஐயாயிரத்து 400 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். குறிப்பிட்ட விவசாயிகளுக்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதால் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக வங்கியில் விசாரித்தபோது 25 லட்சம் ரூபாய் தங்கள் பெயரில் கடன் பெற்றிருப்பது தெரிய வந்தது.
போலி நிறுவனங்களில் முதலீடு
விவசாயிகள் பெயரில் வாங்கிய கடனை என்ன செய்வது என்று தொழிலதிபருக்குத் தெரியாதா என்ன. எல்லா பணக்கார முதலைகளைப் போல போலி நிறுவனங்களைத் தொடங்கி அதில் முதலீடு செய்ததாக கணக்கு காண்பித்துள்ளார். 20 க்கும் மேற்பட்ட அந்த போலி நிறுவனங்களுக்கு சொத்தும் கிடையாது, முகவரியும் கிடையாது என்பது பின்னர்தான் தெரிய வந்தது.
குட்டே மீது வழக்குப்பதிவு
மோசடியில் ஈடுபட்டதாக ரத்னாகர் குட்டே மீது காவல்துறையினர் கடந்த 5 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் கைது நடவடிக்கைகள் இதுவரை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது
தலைவர்கள் வலியுறுத்தல்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்ட மேலவையின் எதிர்க்கட்சித் தலைவருமான தனஞ்செய் முண்டே இந்தப் பிரச்சினையை எழுப்பியுள்ளார். மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் அங்கே பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications