சானிட்டரி நாப்கின் உட்பட 40 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிக் குறை வாய்ப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜிஎஸ்டி கவுன்சிலின் 28 வது கூட்டம் சனிக்கிழமை டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் சானிட்டரி நாப்கின், கைத்தறி பொருட்கள் உட்பட 40 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தினைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதனை உறுதி செய்யும் விதமாக நிதி அமைச்சர் பியூஷ் கோயல் சென்ற வாரம் சில பொருட்கள் மீதான வரியினை மாற்றி அமைக்க இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

வரி விகிதம் குறைப்பு

வரி விகிதம் குறைப்பு

2017 ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த நிலையில் ஒரு வருடத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் 328 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தினைக் குறைத்துள்ள நிலையில் தற்போது மேலும் குறைக்க உள்ள நிலையில் ஆடம்பர பொருட்கள் எனக் கருதப்படும் சில பொருட்களுக்கு 28 சதவீதமாக வரியை உயர்த்தவும் வாய்ப்புகள் உள்ளது.

ஜிஎஸ்டி வரி விகிதம்

ஜிஎஸ்டி வரி விகிதம்

ஜிஎஸ்டி வரி விகிதங்கள் 5, 12, 18, 28 என உள்ள நிலையில் தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருட்கள் மீது 3 சதவீத ஜிஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது.

ஆடம்பர பொருட்கள்
 

ஆடம்பர பொருட்கள்

ஆடம்பர பொருட்களுக்கு ஜிஎஸ்டி கீழ் 28 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில் இது வரை 49 பொருட்கள் மட்டும் இந்தப் பட்டியலில் உள்ளது. எனவே ஆடம்பர பொருட்களில் உள்ளவற்றுக்கு இந்த முறை எந்த வரி விகித மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படிவங்கள்

படிவங்கள்

ஜிஎஸ்டி படிவங்களில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று முன்பு தெரிவித்து இருந்த நிலையில் அதனை இந்தக் கூட்டத்தின் முடிவில் அறிமுகம் செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயச் செஸ் வரி

விவசாயச் செஸ் வரி

விவசாயச் செஸ் வரியை கூடுதலாக 1 சதவீதமும், டிஜிட்டல் பரிவர்த்தனையினை ஊக்குவிக்கச் சலுகைகள் அதிகரிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது.

விமான எரி பொருட்கள்

விமான எரி பொருட்கள்

இயற்கை எரிவாயு மற்றும் விமான எரி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்புக் குறித்துச் சனிக்கிழமை நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்த மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

GST Council May Cut 40 Items In Multiple Slabs On Saturday Meet

GST Council May Cut 40 Items In Multiple Slabs On Saturday Meet
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X