ஆதார் தரவுகள் மீதான கவலைகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் தேசிய கொடுப்பனுவுகள் நிறுவனம் யூபிஐ, ஐஎம்பிஎஸ் சேவைகளில் ஆதார் எண் பயன்படுத்திப் பணப் பரிவர்த்தனை செய்யும் முறையினை நீக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தேசிய கொடுப்பனுவுகள் நிறுவனம் அனைத்து வங்கிகளுக்கும் ஜூலை 17-ம் தேதி அனுப்பிய அறிவிப்பில் ஆதார் எண் ஒரு முக்கியமான தகவல், அதன் மீது பல திருத்தப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
வழிகாட்டும் குழு
ஆதார் எண் பரிவர்த்தனை முறையினை யூபிஐ மற்றும் ஐஎம்பிஎஸ் சேவைகளில் இருந்து நீக்கும் முன்பு ஜூலை 5-ம் தேதி வழிகாட்டும் குழுவுடன் இது குறித்து ஆலோசனையும் நடைபெற்றுள்ளது.
வழிகாட்டும் குழுவில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), எச்டிப்சி வங்கி, சிட்டி வங்கி, மகாராஷ்டிரா கிராமின் வங்கி, ஒன் மொபி குவிக் சிஸ்டம்ல், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உள்ளிட்ட 18 வங்கி நிறுவனங்கள் மற்றும் வங்கி அல்லா நிறுவனங்கள் உள்ளன.
கூடுதல் பணப் பரிவர்த்தனை சேவை
அதார் எண் மூலம் பரிவர்த்தனை செய்யும் முறையானது யூபிஐ அல்லது ஐஎம்பிஎஸ் தொழில்நுட்பத்தில் அளிக்கப்பட்டும் கூடுதல் பணப் பரிவர்த்தனைக்கான வழியாகும். இதன் மூலம் பணம் அளிக்க வேண்டிய வங்கி கணக்கு பயனரின் ஆதார் எண்ணை உள்ளிட்டுப் பரிவர்த்தனை செய்யும் தொகையினை உள்ளிட்டு எளிதாகப் பணத்தினைப் பிறர் வங்கி கணக்கு அனுப்ப முடியும்.
ஆதார் பணப் பரிவர்த்தனை
ஆதார் எண்ணை உள்ளிட்டு இது போன்று பரிவர்த்தனை செய்யும்போது பெறும் பாலும் கடைசியாக எந்த வங்கி கணக்கில் நாம் ஆதார் எண்ணை இணைத்தோமோ அந்த வங்கி கணக்கிற்குத் தான் பணம் செல்லும்.
எப்போது ஆதார் சேவை நீக்கப்படும்?
ஆதார் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யக் கூடிய இந்த யூபிஐ மற்றும் ஐஎம்பிஎஸ் சேவைகளை 2018 ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் நீக்க வேண்டும் என்று தேசிய கொடுப்பனுவுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீண்டும் வருமா?
தேசிய கொடுப்பனுவுகள் ஆணையம் ஆதார் பரிவர்த்தனை முறையினை நீக்குவதாக அறிவித்து இருந்தாலும் மீண்டும் இந்த முறை அமலுக்கு வர வாய்ப்புகள் உள்ளதா என்பது பற்றிக் குறிப்பிடவில்லை என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications