இந்தியாவின் மிகப் பேரிய தனியார் வங்கி நிறுவனமான எச்டிஎப்சி சனிக்கிழமை அதன் 2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 4,601.44 கோடி ரூபாய் நிகர லாபத்தினைப் பெற்றுள்ளது. அதே நேரம் வட்டி வருவாய் சரிந்துள்ளது.
வருவாய்
2017-2018 நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது முதல் காலாண்டின் வருவாய் 15.4 சதவீதம் உயர்ந்து 10,813.57 கோடி ரூபாய் உயரும் என்று எதிர்பார்த்தனர்.
சொத்து
சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது எச்டிப்சி வங்கியின் சொத்துக்கள் 1,558.76 கோடி ரூபாயில் இருந்து முதல் காலாண்டில் 4.5 சதவீதம் உயர்ந்து 1,629.37 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடன் அளித்து நட்டம் அடைந்தது சென்ற ஆண்டு 1,343.2 கோடியாக இருந்த நிலையில் 1,432.2 கோடி ரூபாயாக இருந்தது.
வாரா கடன்
சென்ற ஆண்டு வாரா கடனின் அளவு 1.24 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 1.33 சதவீதமாக உயர்ந்துள்ளது.
டெபாசிட்
2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் வங்கியின் மொத்த டெபாசிட் 20 சதவீதம் அதிகரித்து 8.05 லட்சம் கோடியை பெற்றுள்ளது.. இதுவே சென்ற ஆண்டு 2.27 லட்சம் கோடியாக இருந்தது.
ஊழியர்கள் எண்ணிக்கை
எச்டிஎப்சி வங்கியில் 2017-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி 83,757 ஊழியர்கள் இருந்து வந்த நிலையில் 2018 ஜூன் 30ம் தேதி கணக்கின் படி 89,550 நபர்களாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்


Click it and Unblock the Notifications