கேஷ் ஆன் டெலிவரி சட்டப்பூர்வமானதல்ல.. அமேசான், பிளிப்கார்ட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆர்பிஐ!

By Sornamani Ramamoorthy
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமேசன் மற்றும் பிலிப்கார்ட்டின் இணைய வணிகத்தில் பின்பற்றப்படும் கேஷ் ஆன் டெலிவரி சட்டப்பூர்வமானதல்ல என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு ஆர்பிஐ பதில் அளித்துள்ளது.

சட்டப்பூர்வமானதல்ல

சட்டப்பூர்வமானதல்ல

தர்மேந்திரகுமார் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள் ரிசர்வ் வங்கி, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்கள் மூலமாக வசூலிக்கப்படும் பொருளுக்கான கட்டணங்கள் சட்டப்பூர்வமானதல்ல என்று கூறியுள்ளது. கொடுப்பனவு மற்றும் தீர்வுகளுக்கான சட்டம் பிரிவு 8 இன் படி இது முறைப்படுத்தவில்லை என்று கூறியுள்ளது.

அங்கீகாரம் இல்லை

அங்கீகாரம் இல்லை

இந்தச் சட்டம் மின்னணு மற்றும் இணையவழி பரிவர்த்தனையைக் குறிப்பிடுகிறதே தவிர, கேஷ் ஆன் டெலிவரி பற்றி எதுவும் சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளது. அதேபோல் இதற்கு அங்கீகாரம் எதுவும் வழங்கவில்லை என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

சட்ட விரோதமா- அவசியம் இல்லை

சட்ட விரோதமா- அவசியம் இல்லை

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் பொருளுக்கான பணத்தை, மூன்றாம் தரப்பு விற்பனையாளர் வழியாக வசூல் செய்கின்றன.ஆதலால் கேஷ் ஆன் டெலிவரி முறை செல்லாது எனக் கூற அவசியம் இல்லை எனச் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கேஷ் ஆன் டெலிவரியை சட்டத்துக்குப் புறம்பானது என்று கூற முடியாது என்று தெரிவித்துள்ள கேட்டான் அன்கோவின் பங்குதாரர் ரஸ்தோகி, இணைய வணிகத்தின் ஆபரேட்டர்கள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படும் இந்த முறையைச் சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

200 பில்லியன் டாலர் இலக்கு

200 பில்லியன் டாலர் இலக்கு

ரிசர்வ் அனுமதியின்றி வாடிக்கையாளர்களிடம் சுண்டும் கேஷ் ஆன் டெலிவரி முறையை, சட்டம் அனுமதிக்கக் கூடாது என்றும் கருத்து எழுந்துள்ளது. இந்தியாவில் 2026 ஆம் ஆண்டுக்குள் ஆன் லைன் வணிகத்தில் 200 பில்லியன் டாலர் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cash on delivery deals by ecommerce firms not authorised, says RBI

Cash on delivery deals by ecommerce firms not authorised, says RBI
Story first published: Tuesday, July 24, 2018, 16:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X