அரசியல் ஆதாயத்துக்காக ஜிஎஸ்டி வரிக் குறைப்பு.... ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி இழப்பு!

சென்ற சனிக்கிழமை ஜிஎஸ்டி கவுன்சிலின் 28-வது கூட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு, ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை குறைத்துள்ளதால், நாட்டின் மொத்த வருவாயில் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது கடந்த ஆண்டுப் பட்ஜெட்டின், இலக்கை அடைய முடியாத நிலைக்குக் கொண்டு செல்லும் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவு

ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவு

கடந்த வாரம் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி குறைக்கப்பட்டது. சலவை எந்திரங்கள், லித்தியம் இரும்பு, பேட்டரி உள்ளிட்ட பொருட்கள் வரி குறைக்கப்பட்ட பட்டியலில் வருகின்றன. இது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கான மோடி உத்தி என்று கூறப்படுகிறது.

இந்தக்கூற்றை மறுத்துள்ள நிதியமைச்சர் பியூஸ் கோயல், வருவாய் இழப்பு குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ஒரு சதவீதம்தான் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், அதுபற்றிய அடையாளங்களை வெளியிட முடியாது என்று கூறினார்.

 

உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறை

உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறை

அடுத்தப் பொதுத் தேர்தலுக்கு முன்னர்ச் சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட நலத்திட்டப்பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டிய நிலையில், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து வந்த 3 விழுக்காடு பற்றாக்குறை, 3.3 ஆக அதிகரித்துள்ளது. இழப்புகளால் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் பத்திர வருவாயில் சாற்ற நேரும்.

வல்லுநர்களின் கருத்து

வல்லுநர்களின் கருத்து

இது ஒட்டு மொத்த பட்ஜெடடுக்கான நகர்வாக இருக்காது என்று தெரிவித்துள்ள பொருளாதார வல்லுநர் இந்திராணி பான், ஒட்டுமொத்த சேகரிப்புகளை வைத்துப்பார்த்தால் தவறான நடவடிக்கையாகக் கருத முடியாது என்று தெரிவித்தார். வரி விகிதக் குறைப்புகள் கடன் செலவுகளையும், பொதுத்துறை வங்கிகளில் கடன்களை அதிகரிக்கும் என்று புளூம்பெர்க் எகனாமிக்கின் அபிஷே குப்தா கூறினார்.

வரிக் குறைப்பில் அரசியல் ஆதாயம்

வரிக் குறைப்பில் அரசியல் ஆதாயம்

ஒரு வருடத்துக்கு முன்பு கூடிய கவுன்சில் கூட்டத்தில் பல பொருட்களுக்கான வரி விகிதங்கள் திருத்தப்பட்டன. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலை கருத்தில் கொண்டு இப்போது மீண்டும் வரி குறைக்கப்பட்டுள்ளது. அரசியல் ஆதாயங்களை மனதில் வைத்து ஜி.எஸ்.டி வரி குறைக்கப்படுகிறது.

எது மிகப்பெரிய சீர்திருத்தம்

எது மிகப்பெரிய சீர்திருத்தம்

2019 தேர்தலுக்கு முன் நலத்திட்டங்களை விரைவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் ஆண்டு வரிவருவாயை எட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய சீர்திருத்தம் என அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. பலமுறை மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அதன் குறைபாடுகளும், வணிக இடையூறுகளும் ஜி.எஸ்.டி யை மோசமாக்கி விட்டன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+