ஜிஎஸ்டி அமலுக்கு வந்த போது சானிட்டரி நாப்க்கினுக்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில் பெண்களுக்கான உரிமைக்காக ஒரு ஆண்டாகப் போராடி ஜிஎஸ்டி வரி விலக்கினை பெற்றுள்ளனர்.
28வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சென்ற வாரம் சனிக்கிழமை நடைபெற்ற போது சானிட்டரி நாப்கின்க்கு வரி விலக்கினை அளித்துள்ளனர். எனவே இந்தச் சானிட்டரி நாப்கினின் விலை எவ்வளவு குறையும் என்ற விவரங்களை இங்குப் பார்க்கலாம்.
வரி விலக்கால் பயனில்லை
தற்போது வரை சானிட்டரி நாப்கின் தயாரித்து வரும் நிறுவனங்கள் மூலதன பொருட்களுக்கு உள்ளீட்டு வரி வரவைப் பெற்று வருகின்றன. இனி ஜிஎஸ்டிக்கு விலக்கு அளிக்கப்பட இருப்பதால் இந்த நன்மையினை நிறுவனங்களால் பெற முடியாது. எனவே சானிட்டரி நாப்கின் விலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது, கடைசிப் பயனாளிகளுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
எவ்வளவு விலை குறையும்?
சானிட்டரி நாப்கினுக்கான ஜிஎஸ்டி வரி விலக்கினை அடுத்து வாடிக்கையாளர்கள் 10 பேட் உடைய ஒரு பாக்கெட்டினை வாங்க 50 பைசா மட்டுமே விலை குறையும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே சானிட்டரி நாப்கின் மூலதன பொருட்களுக்கு உள்ளீட்டு வரி வரவு அளித்தால் மட்டுமே விலை பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும்.
உள்ளீட்டு வரி வரவு
சானிட்டரி நாப்கின் உற்பத்தியாளர்கள் 2.30 ரூபாய் மதிப்பிலான ஒரு பேடிற்கு உள்ளிட்டு வரியாக 3 பைசா பெற்று வருவதாகம் தெரிவித்துள்ளார்.
விலை உயர வாய்ப்பு
ஜான்சன் & ஜான்சன், பி&ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் அதன் தாய் நிறுவனத்திற்கு 18 சதவீத ஜிஎஸ்டி-ஐ ராயல்டியாகச் செலுத்தி வரும் நிலையில் இவர்களின் ரீடெயில் விலை உயர்த்தப்படவும் வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications