டாடா குழுமத்தின் இன்றைய மதிப்பு 100 பில்லியன் டாலரினை விட அதிகம் என்றுள்ள நிலையில் டாடா சன்ஸின் முதலீட்டு நிறுவனம் நிதி, காப்பீடு, பாதுகாப்பு, ரியாலிட்டி மற்றும் சில்லறை வணிகப் பிரிவுகளில் 10,161 கோடி ரூபாயினை அதன் தலைவர் முதலீடு செய்ய இருக்கிறார் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
சென்ற ஆண்டு டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இ ருந்து சைரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்ட பிறகு அந்தப் பொறுப்புத் தமிழகத்தினைச் சேர்ந்த சந்திரசேகரன் ஆர்களுக்குக் கிடைத்தது. அப்போது டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் சந்திர சேகரன் இருந்து வந்த நிலையில் அதில் இருந்து வெளியேறி டாடா குழுமத்தின் தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலீடுகள் பெறும் நிறுவனங்கள்
டாடா குழுமம் தற்போது டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் 1,800 கோடி ரூபாயும், டாடா ரியலிட்டி & இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் நிறுவனத்தில் 1,750 கோடி ரூபாயும், டாடா கேப்பிட்டல் நிறுவனத்தில் 2,500 கோடி ரூபாயும், டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 260 கோடி ரூபாயும், இன்ஃபினிட்டி ரீடெயில் நிறுவனத்தில் 250 கோடி ரூபாயும், துணை நிறுவனமான பனாடோனெ ஃபின் இன்வெட் பிரிவில் 2,001 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளது.
ஐடிபிஐ ஃபெடரல் லைப் இன்சூரன்ஸ்
அது மட்டும் இல்லாமல் 1,600 கோடி ரூபாய் முதலீட்டில் ஐடிபிஐ ஃபெடரல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தினைக் கையகப்படுத்தும் முயற்சியிலும் டாடா குழுமம் இறங்கியுள்ளது. டாடா குழும செய்தி தொடர்பாளர்கள் இது குறித்து விவரங்களை நம்முடன் பகிர்ந்துகொள்ளவும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
டிசிஎஸ்
டாடா குழுமத்திற்கு மிகப் பெரிய அளவில் லாபம் அளித்து வரும் நிறுவனமான டிசிஎஸ் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திரும்ப வாங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரும் காலாண்டுகளில் டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் உயரும். இதே போன்று சென்ற வருடம் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை டிசிஎஸ் திரும்ப வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
சந்திரசேகரன்
சந்திரசேகரன் டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நிறுவனம் தவறவிட்ட வாய்ப்புகள் மற்றும் வெற்றிகரமாகச் செயல்படாத நிறுவனங்களைக் கையகப்படுத்தியது போன்றவற்றில் கவனம் செலுத்து வருகிறார். அவற்றை நட்டத்தில் இருந்து மீட்கவே இந்த மூலதன திட்டங்கள் என்றும் கூறப்படுகிறது.
இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள்
தலைவர் பதவிக்குப் பொறுப்பேற்ற பிறகு தங்களது மொபைல் வணிகத்தினை ஏர்டெல் குழுமத்திற்கு விற்றது மற்றும் ஐரோப்பிய ஸ்டீல் வணிகத்தினைத் தைசைக்ரூப் உடன் இணைத்தது போன்ற முக்கிய முடிவுகளையும் சந்திரசேகரன் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச - உள்ளூர் சந்தை
டாடா குழும நிறுவனங்களின் சர்வதேச வணிகங்கள் வளர்ச்சி மந்தமாக இருப்பதால் உள்ளூர் சந்தியில் கவனத்தினைத் திருப்பி உள்ளார். டாடா குழுமத்தின் 60 சதவீத வருவாய் வெளிநாடுகளில் இருந்து பெறுவது குறிப்பிடத்தக்கது.
எனவே வரும் நாட்களில் டாடா குழுமத்தின் இந்திய வணிகங்களில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழும் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!



Click it and Unblock the Notifications