இந்திய பங்கு சந்தை சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டன. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக இன்று 70.82 ஆகச் சரிந்து இருந்தது. கடந்த சில வாரங்களாகவே ஆசிய நாணய மதிப்பு மோசமான நிலையில் உள்ளது.
இந்த ஒரு ஆண்டில் மட்டும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 9.76 சதவீதம் சரிந்துள்ளது. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 77.14 டாலர் ஒரு பேரல் என்றும் WTI கச்சா எண்ணெய் 69.51 டாலர் என்றும் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்றைய இந்திய பங்கு சந்தை நிலவரத்தினை இங்கு விளக்கமாக இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
பங்கு சந்தை நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 32.83 புள்ளிகள் என 0.08 சதவீதம் சரிந்து 38,690.10 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான 15.10 புள்ளிகள் என 0.13 சதவீதம் சரிந்து 11,676.80 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் மெட்டல், எப்எம்சிஜி, ஹெல்த்கேர், இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர், கேப்பிட்டல் கூட்ஸ், பவர், எண்ணெய் & எரிவாயு, நுகர்வோர் சாதனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகள் லாபம் அளித்தன. அதே நேரம் ஐடி, டேக், ரிலையாலிட்டி, வங்கி துறை பங்குகள் நட்டம் அளித்துள்ளன.
லாபம் அளித்த நிறுவனங்கள்
சன் பார்மா, டாடா ஸ்டீல், ஐடிசி, பாரதி ஏர்டெல், என்டிபிசி, பவர் கிரிட் பங்குகள் லாபம் அளித்தன.
நட்டம் அளித்த பங்குகள்
இண்டஸ் இண்ட் வங்கி, மாருதி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், யெஸ் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் நட்டம் அளித்துள்ளன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications