ஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..!

இந்தியாவின் அனைத்துப் பொருட்களும் ஒரே நாடு ஒரே வரி என்று சொல்லி வர்த்தகம் செய்யத் தொடங்கிய பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற சில பொருட்களை மட்டும் எதற்கு பழைய வரி முறைகளிலேயே வைத்திருக்கிறீர்கள்...?

கேள்வி கேட்கும் சேத்தன் பகத்

பெட்ரோல் (petrol) லிட்டருக்கு 85 ரூபாய் என்றும், பெட்ரோலை விட அதிக அளவு இந்தியர்கள் பயன்படுத்தும் டீசலில் விலை 78 ரூபாய் என்றும் உயர்ந்திருக்கிறது. இது உண்மையாகவே நடந்த விலை ஏற்றமா...? மத்திய அரசின் கமுக்கமான திட்டம்.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

பொதுவாக இந்தியா ஒரு கச்சா எண்ணெய் இறக்குமதி நாடு என்பதால், கச்சா எண்ணெயின் விலையைப் பொறுத்து தான் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாற்றங்கள் நடக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் மத்திய அரசும் சரி மாநில அரசும் சரி இரண்டுமே மக்களை ஏமாற்றி பெட்ரோல் மற்றும் டீசல் மீது வரி விதித்து அதில் சம்பாதித்தும் வருகிறது.

பெட்ரோல் மீதான வரி

பெட்ரோல் மீதான வரி

மத்திய அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு நேரடியாக 20 ரூபாய் வரி விதிக்கிறது. மாநிலங்களுக்கு மாநிலம் பெட்ரோல் மீதான வரியை தங்களுக்குத் தோதாக விதித்திருக்கிறது. உதாரணமாக தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 17 ரூபாய் வரி விதிக்கிறது மாநில அரசு. ஆக பெட்ரோல் மீதான வரி மட்டும் 37 ரூபாய். இதை கழித்துக் கொண்டால் பெட்ரோலின் அசல் விலை அல்லது உற்பத்தி செய்து பெட்ரோல் பங்குகளின் லாபத்தோடு, ஒரு லிட்டருக்கு விற்க வேண்டிய விலை வெறும் 43 ரூபாய்.

கச்சா எண்ணெய் விலை குறைந்த போது ஏமாற்றிய அரசு

கச்சா எண்ணெய் விலை குறைந்த போது ஏமாற்றிய அரசு

கடந்த நான்கு வருடங்களில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே இருந்தது. சர்வதேச அள்வில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 25 டாலருக்கு கீழ் எல்லாம் வர்த்தகமானது. அப்போது எல்லாம் மத்திய அரசு தந்திரமாக விலையை குறைக்காமல், தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்களை சரிகட்டிக் கொண்டது. கடந்த பட்ஜெட் அறிக்கை படி கச்சா எண்ணெய் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களான பெட்ரோல், டீசல் மீதான வரிகள் மூலம் மட்டும் மூன்று லட்சம் கோடி ரூபாய் வரியாக சம்பாதித்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போது மட்டும் நேரடியாக விலையை மக்கள் மீதே திணித்துவிட்டது. வரிகளை யாருக்காக வசூலிக்கிறீர்கள்...? மக்களுக்காகத் தானே. மக்கள் இங்கு விலை ஏற்றத்தால் அவதிப்படும் போதும் கூட அரசின் வருமானம் அத்தனை முக்கியமா...?

கணக்கீடு

கணக்கீடு

பெட்ரோல் மீது இரு அரசும் விதிக்கும் வரியை சதவிகிதத்தில் கணக்கிட்டால் 86 சதவிகிதம் வரி. 37/43*100= 86.04%. இதுவே பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மோடிஜியின் திட்டமான ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டால் 37*28/100= 47.36 ரூபாய்க்கு பெட்ரோல் கிடைக்கும். பிறகு ஏன் இந்த நாட்டுக்குத் தேவையான அமல்படுத்தலை மட்டும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.

வரி விலைவாசியை உயர்த்தும்... எப்படி

வரி விலைவாசியை உயர்த்தும்... எப்படி

ஒரு அத்தியாவசியப் பொருளுக்கு 86 சதவிகிதம் வரி விதித்தால் எப்படி நாடு இயங்கும். இந்தியா இன்னும் பெரும்பாலான பொருட்களைப் போக்குவரத்து செய்ய, சாலைகளையே நம்பி இருக்கின்றன. சாலை போக்குவரத்து பெரிய அளவில் டீசல் லாரிகள் மற்றும் டிரக்குகளையே நம்பி இருக்கின்றன. இந்த 86% அப்படியே லாரி உரிமையாளர்கள், பொருட்களை சப்ளை செய்பவர் மீது தான் சுமத்துவார். பொருட்களை சப்ளை செய்பவர் மக்கள் மீது தானே சுமத்தியாக வேண்டும்.

ஒரே நாடு ஒரே வரி எங்கே

ஒரே நாடு ஒரே வரி எங்கே

இந்தியாவில் பெரும்பாலான பொருட்கள் ஜி.எஸ்.டி என்கிற சரக்கு மற்றும் சேவை வரிக்கு உட்பட்டு வர்த்தகமாகி வருகின்றன. ஆனால் அரசுக்கு பிரச்னை விளைவிக்கும் அல்லது அரசின் லாபத்தை குறைக்கும் சில பொருட்களான கச்சா எண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற சில பொருட்களை மட்டும் இந்த ஜி.எஸ்.டி வரியில் சேர்க்கப்படவில்லை.

நிறுவனம் கேட்டால் என்ன செய்வது.

நிறுவனம் கேட்டால் என்ன செய்வது.

இப்படி அரசு தனக்கு சாதகமானதைப் பார்க்கும் போது, ஒரு நிறுவனமும் நாளை தனக்கு சாதகனா பொருட்களை ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கும் படி போராடினால் நாடு எப்படி இயங்கும்.

தீர்வு

தீர்வு

மக்களிடம் இருந்து வரி வருவாய் தான் ஒரு நாட்டுக்கு மிக அவசியமான வருவாய். அது இல்லாமல் எந்த அரசும் நிர்வாகம் செய்ய முடியாது தான். ஆனால் இன்று அரிசி பருப்புக்கு இணையான அத்தியாவசியப் பொருள் பெட்ரோல், டீசல். அதன் மீதான விலையை உயர்த்துவது ஒட்டு மொத்த இந்தியாவின் பொருளாதாரத்தையும் மோசமாக பாதிக்கும். இதற்கு எல்லாம் தீர்வாக மத்திய அரசின் கனவுத் திட்டமான ஜி.எஸ்.டி கொண்டு வருவதே நல்லது" என்று காட்டமாக பேசி இருக்கிறார்.  காட்டி இருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+