சொதப்பும் இந்தியா, சந்தை மேலும் சரியும், அலறும் மூடி..!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகபட்சமாக 72.9 ரூபாய் வரை சரிந்திருக்கிறது தற்போது மதியம் 12.40 மணியளவில் 72.81க்கு வர்த்தகமாகி வருகிறது. இந்த திடீர் சரிவைக் கட்டுப்படுத்த இந்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அது எதுவும்மே வேலைக்கு ஆகாது என்று மோடி திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது.

சொதப்பும் இந்தியா, சந்தை மேலும் சரியும், அலறும் மூடி..!

மசாலா பாண்ட்ஸ்

மசாலா பாண்டுகள் என்று அழைக்கப்படும், வெளிநாட்டு ரூபாய் கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு, வித்ஹோல்ட் டேக்ஸ் (Withhold Tax) என்று ஒரு வரி விதிக்கப்படும். அந்த வரியினை தற்போது மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது.


கார்ப்பரேட் பாண்டுகள்

ஒரு நிறுவனம் வெளியிடும் 100% கார்ப்பரேட் பாண்டுகளில் எந்த ஒரு வெளிநாட்டு முதலீட்டாளரும் 20%-க்கு மேல் முதலீடு செய்யக் கூடாது என்று ஒரு சட்டம் இருந்தது. அந்தச் சட்டத்தை தற்போது தளர்த்தி 50 சதவிகிதம் வரை முதலீடு செய்யலாம் என்று சொல்லி இருக்கிறது மத்திய அரசு.

வெளிநாட்டுக் கடன்கள்

இந்தியர்கள் வெளிநாடுகளில் வாங்கி இருக்கும் கடன்களை, வெளிநாட்டு வங்கிகள் அல்லது கடன் வழங்கியவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் செலுத்த வேண்டும் என்று இருந்த கால அளவை மூன்று ஆண்டுக்ளாக அதிகரித்திருக்கிறது. இது 50 மில்லியன் அமெரிக்க டாலர் வரையான கடன்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மூடியின் கணிப்பு

இந்திய நிதி அமைச்சகத்தின் இந்த முடிவுகளால் உடனடியாக நிலைமை சீராகாது. இதனால் இந்திய சந்தைகளுக்கு வர வேண்டிய வெளிநாட்டு முதலீடுகள் உடனடியாகவும் வராது. இந்தியாவுக்குள் வெளிநாட்டு முதலீடாக டாலர் வந்தால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிக்கும். அதாவது 1 டாலருக்கு 72 ரூபாயில் இருந்து 1 டாலருக்கு 70 ரூபாய், 69 ரூபாய் என்று இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிக்கும்.

அதிகரித்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை

2018 - 19 நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டில் இந்திய அரசின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது. ஆனால் 2013-ம் ஆண்டில் அதிகரித்த ஐந்து சதவிகிதம் என்கிற ரீதிய்ல் அதிகரிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+