மத்திய அரசிடம் தேசிய பேரிடர் நிதி உதவி அளிக்கத் தேவையான பணம் இல்லை என்றும் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் அதனால் ஜிஎஸ்டி செலுத்தும் போது 'பேரழிவு வரி' என்ற பெயரில் செஸ் வரிப் பிடித்தம் செய்யலாம் என்று நிதி அமைச்சகத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவராக உள்ள பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி இது குறித்து அட்டர்னி ஜெனரலிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கருத்து கேட்பு
மறுபக்கம் பேரழிவு வரி வசூல் செய்ய அனைத்து மாநில அரசுகளிடம் இருந்து கருத்துக்கள் கேட்டு ஜிஎஸ்டி கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது. இந்தக் கடிதத்தில் அனைத்து மாநில அரசுகளிடமும் 15 முதல் 20 கேள்விகள் வரை கேட்டுள்ளனர். இதற்கு மாநில அரசுகள்ல் அளிக்கும் பதிலினை பொருத்து முடிவுகள் எடுக்கப்படும் என்று சுஷில் மோடி தெரிவித்துள்ளதாகக் கூறுகின்றனர்.
எப்படிப் பயன்படுத்தப்படும்?
மேலும் இதன் மூலம் வசூலிக்கப்படும் வரித் தொகை அந்தத்தந்த மாநிலங்களில் ஏற்படும் பேரழிவுகளுக்கு மட்டும் செலவு செய்யப்படுமா அல்லது தேசிய அளவில் பயன்படுத்தப்படுமா என்பது மாநில பிரதிநிதிகளுடன் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட உள்ளது.
பேரழிவு வரி வசூல் சரிவு
ஜிஎஸ்டி அமலுக்குக் வந்த பிறகு தேசிய பேரழிவு நிலை வரி சரிந்துள்ளது எனவே இந்த ‘பேரழிவு வரி' அமலுக்கு வர வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 2016-2017 நிதி ஆண்டில் தேசிய பேரழிவு நிலை வரி வசூல் 6,450 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே 2017-2018 நிதி ஆண்டில் 3,660 கோடி ரூபாயாகச் சர்ந்துள்ளது. இதனால் மாநிலங்களில் பேரிடர் ஏற்படும் போது நிதி உதவி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
அடுத்து வர இருக்கும் நவம்பர் மாத ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டுச் சுமுக முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications