மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் வியாழக்கிழமை 2018-2019 நிதி ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டு அறிக்கையினை வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் சென்ற வருடத்தின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது லாபம் 9.8 சதவீதம் சரிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
லாபம்
வல்லுநர்கள் மாருதி சுசூகியின் இரண்டாம் காலாண்டு லாபம் 2,041 கோடியாக இருக்கும் என்று கணித்து இருந்த நிலையில் அது 2,240.40 கோடி ரூபாயாக வந்துள்ளது. இதுவே சென்ற ஆண்டு 2,484.30 கோடி ரூபாய் லாபத்தினை மாருதி சுசூகி பெற்று இருந்தது.
விற்பனை சரிவு
இந்தியாவின் மிகப் பெரிய பட்ஜெட் கார் விற்பனை நிறுவனமான மாருதியின் லாபம் சரிவுக்கு முக்கியக் காரணம் விற்பனை 1.5 சதவீதம் சரிந்து 4,84,848 கார்கள் மட்டும் விற்றது என்று தரவுகள் கூறுகின்றன.
நிகர விற்பனை
2-ம் காலாண்டு மாருதி சுசூகி நிறுவனம் 215,519 மில்லியன் ரூபாய்க்கு நிகர விற்பனை செய்துள்ளது. சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது இது 0.5 சதவீதம் அதிகமாகும்.
அரையாண்டு விற்பனை
2018-2019 நிதி ஆண்டி அரையாண்டு முடிவடைந்துள்ள நிலையில் மாருதி சுசூகி நிறுவனம் 975,327 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது இது 10 சதவீதம் உயர்வாகும்.
பங்குகள்
காலாண்டு அறிக்கையில் லாபம் சரிந்ததை அடுத்து மாருதியின் பங்குகள் விலை இன்று சந்தை முடியும் போது 47.55 புள்ளிகள் என 0.70 சதவீதம் சரிந்து 6,721 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications