இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டாரா மோட்டார்ஸ் புதன்கிழமை 2018-2019 நிதி ஆண்டுக்கான காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. அதன்படி 1,048.80 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதுவே சென்ற ஆண்டு 2,482.78 கோடி ரூபாயாக வருவாயினைப் பதிவு செய்தது.
டாடா மோட்டார்ஸின் ஆடம்பர கார் தயாரிப்பு பிரிவான ஜாகுவார் ஐரோப்பிய யூனியனில் செய்யப்பட்ட டீசல் வாகன சட்ட திருத்தங்களினால் 101 மில்லியன் பவுண்டுகளை இழந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் வர்த்தகப் போரினால் சீனாவில் ஜேஎல்ஆர் கார் விற்பனை 13.2 சதவீதமாகச் சரிந்து 1,29,887 மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வருவாய்
அதே நேரம் டாடா மோட்டார்ஸின் மொத்த வருவாய் 72,729.30 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே சென்ற ஆண்டு 70,344.76 கோடி ரூபாயாக இருந்தது.
மொத்த விற்பனை
டாடா மோட்டார்ஸின் மொத்த விற்பனை 25 சதவீதம் உயர்ந்து 190,283 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில் வணிக வாகனங்களின் வளர்ச்சி 29 சதவீதமாகவும், பயணிகள் வாகன விற்பனை வளர்ச்சி 18 சதவீதமாக உள்ளது.
முதலீடுகள்
டாடா மோட்டார்ஸ் வாகனங்கள் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் மீது 1000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது.
பங்குகள் மீதான வருவாய்
ரூ. 2 மதிப்பிலான பங்குகள் மீதான வருவாய் முதல் காலாண்டில் 5 ரூபாயாக இருந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டில் 3 ரூபாயாகக் குறைந்துள்ளது.
பங்கு சந்தை
நட்டம் அடைந்த போதிலும் டாடா மோட்டார்ஸின் பங்குகள் மதிப்பு இன்று 1.35 புள்ளிகள் என 0.76 சதவீதம் உயர்ந்து 178.65 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications