ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 2017 ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வந்த இரண்டாம் முறையாக அக்டோபர் மாதம் 1 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட் நிதி பற்றாக்குறையில் உள்ள மத்திய அரசுக்கு அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் சற்று ஆறுதலை அளித்துள்ளது.
ரூ. 1 லட்சம் கோடி
இதற்கு முன்பு ஜிஎஸ்டி வசூல் 2018 ஏப்ரல் மாதம் ஆண்டு இறுதி கணக்கு முடிக்கப்பட்டதால் அப்போது 1 லட்சம் கோடி ரூபாயினைத் தொட்டதாகக் கூறப்பட்டது. இந்த முறை சென்ற வருடத்தின் இறுதி தீர்வை சமர்ப்பிக்கக் கடைசி மாதம் செப்டம்பர் மாதம் என்பதால் வரி வசூல் 1 லட்சம் கோடி ரூபாயினைத் தொட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
வரி வசூல் விவரம்
மத்திய அரசு 2018 அக்டோபர் மாதம் வசூல் செய்யப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி 1,00,710 கோடி ரூபாய் என்று தெரிவித்துள்ள நிலையில் மத்திய ஜிஎஸ்டி வசூல் 16,464 கோடி ரூபாய் என்றும், மாநில ஜிஎஸ்டி வசூல் 22,826 கோடி ரூபாய் என்றும் ஐஜிஎஸ்டி 43,419 கோடி ரூபாய் என்றும், செஸ் 8,000 கோடி ரூபாய் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஜிஎஸ்டி தாக்கல் எண்ணிக்கை
செப்டம்பர் மாத்தினை விட அதிகம் என 2018 அக்டோபர் மாதத்தில் 67.45 லட்சம் நபர்கள் ஜிஎஸ்டி தாக்கல் செய்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.
மத்திய அரசின் வருவாய்
மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் அக்டோபர் மாதம் 48,954 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
மாநில அரசுகளின் வருவாய்
அதே நேரம் மாநில அரசுகளுக்கு 52,934 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்துள்ளது.
அருண் ஜேட்லி
ஜிஎஸ்டி வரி வசூல் குறித்துக் கருத்து தெரித்த நிதி அமைச்ச அருன் ஜேட்லி ‘அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடி ரூபாயினைக் கடந்துள்ளது. இதற்குக் காரணம் குறைந்த ஜிஎஸ்டி விகிதங்கள், வரி ஏய்ப்பு குறைந்துள்ளது, அதிக இணக்கம்' போன்றவையே எனவும் குறிப்பிட்டுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications