வணிக வாகன உற்பத்தி நிறுவனமான அஷோக் லைலாண்டு 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கையினைச் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன் படி சென்ற ஆண்டு 334 கோடி ரூபாயாக இருந்து வந்த லாபம் நடப்பு ஆண்டில் 460 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மூலப் பொருட்கள் விலை உயராமல் இருந்து இருந்தால் அஷோக் லைனாண்டின் லாபம் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளனர்.
வருவாய்
செயல்பாட்டு வருவாய் 25.2 சதவீதம் உயர்ந்து 7,608 கோடி ரூபாயாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூலப்பொருட்கள் விலை உயர்வால் செலவு 23.2 சதவீதம் அதிகரித்து 6,9060 கோடி ரூபாய் என்றும் தெரிவித்துள்ளனர்.
தலைமை நிர்வாக அதிகாரி ராஜிநாமா
அஷோக் லைலாண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான வினோத் கே தாசரி 14 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பதவியில் இருந்து ராஜிநாமா செய்துள்ளதாகவும் மற்றோரு அறிக்கை மூலமாக உறுதி செய்துள்ளனர்.
அடுத்து யார்?
தீரஜ் இந்துஜா அவர்கள் உடனடியாகத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பங்கு சந்தை
காலாண்டு அறிக்கை வெளியீடு என்பதால் சந்தை நேர முடிவில் அஷோக் லைலாண்டு நிறுவனத்தின் பங்குகள் 0.95 புள்ளிகள் என 0.80 சதவீதம் உயர்ந்து 119.05 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.


Click it and Unblock the Notifications