மத்திய அரசு விரைவில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையைக் கட்டாயமாக்கப்பட உள்ளதாக உணவு மற்றும் நுகர்வோர்கள் விவகாரங்கள் துறை மைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
தற்போது தங்க நகைகளில் சுத்தமான தங்கம் என்பதற்கு ஆதாரமாகப் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரைகள் இருக்க வேண்டும். ஆனால் இன்று வரை அது கட்டாயமாக இல்லை.
ஆபரண நகை
இந்தியாவில் ஆபரணத் தங்க நகைகள் பொதுவாக 18 காரட், 22 காரட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றில் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரையினைக் கட்டாயம் ஆக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பிஐஎஸ் ஹால்மார்க் மையங்கள்
உலகத் தரம் வாய்ந்த தங்க நகை என்பதற்கான பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரைகளைச் சோதனை செய்யும் போது மையங்கள் இந்தியாவில் 220 உள்ளன. அவற்றில் அதிகம் தமிழ் நாட்டிலும், தொடர்ந்து இரண்டாவது இடத்தில் கேரளாவும் உள்ளது.
ஹால்மார்க்
தங்க நகையினைச் செய்த பிறகு அவை இந்த ஹால்மார்க் பரிசோதனை செய்யும் மையங்களுக்கு அனுப்பட்டுச் சோதனை செய்யப்பட்ட பிறகு தான் ஹால்மார்க் ம் உத்திரை அச்சிடப்பட்டு விற்பனைக்கு அனுமதிக்கப்படும். இந்த முத்திரை இல்லை என்றால் அது உலகத் தரம் வாய்ந்த தங்க நகை இல்லை என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் அதிகம் தங்கம் வாங்கும் நகரம் படைத்த மாநிலங்கள்
1. கேரளா
2. தமிழ் நாடு
3. ஹரியானா
4. மேற்கு வங்கம்
5. குஜராத்
6. சட்டிஷ்கர்
7. கர்நாடகா
இந்தியாவில் அதிகம் தங்கம் வாங்கும் கிராமம் படைத்த மாநிலங்கள்
1. கேரளா
2 .கோவா
3. கர்நாடகா
4. ஹிமாசல் பிரதேசம்
5. தமிழ் நாடு
6. ஜம்மு & காஷ்மீர்
7. பஞ்சாப்
குறைந்த அளவில் தங்கம் வாங்கும் கிராமம் உள்ள மாநிலங்கள்
1. பீகார்
2. ஆசாம்
3. நாகாலாந்து
4. மேகாலயா
5. ஜார்கண்ட்
6. மிசோரம்
7. சிக்கிம்
குறைந்த அளவில் தங்கம் வாங்கும் நகரம் உள்ள மாநிலங்கள்
1. பீகார்
2. கோவா
3. ஜார்கண்ட்
4. நாகாலாந்து
5. மிசோரம்
6. மேகாலயா
7. சிக்கிம்
சிக்கல்
மத்திய அரசு இந்த முடிவினை அமலுக்கு கொண்டு வரும் போது பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை இல்லா தங்க நகைகளை வங்குவது மற்றும் விற்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அது மட்டும் இல்லாமல் வியாபரிகள் ஹால்மார்க் முத்திரை இல்லா நகைகளை அடிமாட்டு விலைக்கு வாங்கும் நிலையும் ஏற்படும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications