சரித்திரப் புகழ் டிமானிட்டைசேஷன் என்கிற பணமதிப்பு இழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் குரித்து மேற்கு வங்க நிதி அமைச்சர் ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.
அமித் மித்ரா
மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா நேற்று கூறுகையில், 59 நிமிடத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் அளிக்கப்படும் என்கிற மத்திய அரசின் முயற்சியும் வழக்கம் போல மோடியின் மோசடி தான். இந்த திட்டத்தின் கீழ், இந்த இணையதளத்தின் மூலம் நாட்டின் எந்த பகுதியைச் சேர்ந்தவர்களும் இதுவரை கடன் பெறவில்லை என்றும் விமர்சித்து இருக்கிறார்.
இழப்பீடு
ஜிஎஸ்டி அமலாக்கத்தின் காரணமாக 2017-ம் ஆண்டு முதல் இப்போதுவரை மாநில அரசின் வருவாய் இழப்பு ரூ.78,929 கோடியாக உள்ளது. இந்த இழப்பினை மத்திய நேரடி வரிகள் விதிகளின் கீழ் மத்திய அரசு இழப்பீடாக அளிக்க வேண்டும்.
பயம்
மத்திய அரசு நிலையாக உள்ளது என நம்பச் சொல்கிறது. ஆனால் தவறான முடிவுகளை மேற் கொள்கிறது என்பது தான் உண்மை. அதை எத்தனை நாட்களுக்குத்தான் மறைக்க முடியும். தவறான முடிவுகளையும், தோல்வியளிக்கும் முடிவுகளையுமே மேற்கொள்வது மத்திய அரசின் வாடிக்கையாகிவிட்டது. சிறு, குறு மற்றும் குடிசைத் தொழில் செய்யும் தொழில் முனைவோர்களின் மனதில் பொருளாதார தேக்கம் குறித்த பயம் நிலவுகிறது.
நமக்கு வரி அதிகம்
விவசாயிகள் மற்றும் முறைப்படுத்தப்படாத தொழில்களில் உள்ளவர்களின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தினை பணமதிப்பு இழப்பு நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது. அதன் பாதிப்புகள் இப்போது வரை தொடர்கிறது. வளர்ந்த நாடுகளான ஜப்பான், சுவிட்சர்லாந்து நாடுகளை விட இந்தியாவில் ஜிஎஸ்டி வரிச் சதவிகிதம் அதிகமாக உள்ளதை எங்கே சென்று முறையிடுவது..? என்று நம்மிடமே கேட்கிறார் மிட்ரா.
இழப்புகள் தொடருமோ?
பணமதிப்பு இழப்பு மற்றும் ஜிஎஸ்டியின் காரணமாக இந்திய ஜிடிபியில் ரூ.4.80 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2015-16 முதல் பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது, அதை சில சர்வதேச அமைப்புகளும் உறுதி செய்துகொண்டு தானே இருக்கிறது. அதை மத்திய அரசு தான் பொறுப்பாக சரி செய்ய வேண்டும், என்கிறார் நிதி அமைச்சர் மித்ரா.


Click it and Unblock the Notifications