கஜா புயல் புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகபட்டினம் தேனி, தஞ்சாவூர், சிவகங்கை, திருசி, கரூர் மற்றும் ராமநாதபுரம் உட்பட 11 மாவட்டங்களில் சேதத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய மறைமுக வரி வாரியம் இங்கு உள்ள வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரிச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி
தமிழ் நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு வேண்டும் என்றும் அங்குக் கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களுக்கு விலக்கு வேண்டும் என்று கேட்டு இருந்தார்.
மத்திய மறைமுக வரி ஆணையம்
இந்நிலையில் டிவிட்டர் மூலம் ஜிஎஸ்டி வரி விலக்கு குறித்து அறிவ்ப்பு வெளியிட்டுள்ள மத்திய மறைமுக வரி ஆணையம் தமிழ் நாட்டைப் பாதித்த கஜா மட்டும் இல்லாமல் ஆந்திராவைப் பாதித்த தித்லி புயல் பகுதிகளுக்கும் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டிஆர்-3பி
தமிழ் நாட்டில் கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களுக்கு அக்டோபர் மாத ஜிஎஸ்டிஆர்-3பி தாக்கல் செய்ய 20181 டிசம்பர் 20 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவே ஆந்திராவின் ஸ்ரீகுலம் பகுதிக்கு 2018 நவம்பர் 30-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டிஆர்-1
அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-1ஐ தாக்கல் செய்வதற்கான பணிகளில் 2018 டிசம்பர் 20-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டிஆர்-4
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான ஜிஎஸ்டிஆர் 4 படிவத்தினைத் தாக்கல் செய்வதற்கான கலக்கெடு 2018 நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டிஆர்-7
அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான ஜிஎஸ்டிஆர் 7 படிவத்தினைத் தாக்கல் செய்ய 2019 ஜனவரி 31-ம் தேதி வரி காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நிவாரணப் பொருட்கள்
மேலும் ரயில் மூலம் கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications