தேர்தல் திருவிழா தொடங்கினால்தான் விவசாயிகளுக்கு தீபாவளி. அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளில், அவர்களை சலிக்க வைக்காமல் கேட்க வைப்பது வேளாண் கடன் தள்ளுபடி என்ற ஒற்றை வார்த்தை தான். தேர்தல் நடைபெறும் போதெல்லாம் இதனை வழக்கமாக்கி விட்ட அரசியல்வாதிகளால் வங்கி நிர்வாகங்கள்தான் பின்னடைவைச் சந்திக்கின்றன.
தயக்கம்- அதிர்ச்சி
கடன் தள்ளுபடியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விவசாயிகள், வாங்கிய கடனை செலுத்துவதற்கு தயக்கம் காட்டி வருகிறார்கள். மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் என அடுத்தடுத்து நடைபெறவுள்ள எலெக்சன் பீவர் விவசாயிகளுக்கு கதகதப்பை கொடுத்துக் கொண்டிருக்க வங்கியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
விவசாயிகள் பேரணி
மத்திய அரசு தங்களை வஞ்சித்து விட்டதாக கடந்த வாரம் தலைநகர் டெல்லியில் திரண்ட விவசாயிகளின் பிரமாண்ட ஊர்வலம், பாலிசி மேக்கர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் புளியைக் கரைத்தது. மறுபுறம் கடனை எப்படியாவது வசூலிக்க வேண்டிய நிலையில் உள்ள வங்கியாளர்களுக்கும் அந்த ஒற்றுமை நடுக்கத்தை ஏற்படுத்தியது.
கடன் தள்ளுபடி - எதிர்பார்ப்பு
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் வேளாண் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்ற நப்பாசையில், வாங்கிய கடன்களை செலுத்துவதற்கு விவசாயிகள் தயாராக இல்லை. விவசாயிகளிடையே நிலவும் இந்த தயக்கம், மிகப்பெரிய பேட் லோன் போர்ட்போலியோவை உருவாக்கி விடும் என்கிறார்கள் பொதுத்துறை வங்கி அதிகாரிகள்.
அதிகரித்த வராக்கடன்
நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தெலுங்கானா மாநிலத்தில்,. 2018 ஆம் ஆண்டு ஜூனுடன் முடிவடைந்த காலாண்டில் Non Performing Asset 18,194.49 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலாண்டில் வேளாண் கடனில் NPAs 4,795 .கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அக்ரி டேர்ம் லோனில் என்.பி.ஏ 12 சதவீதமாகவும், வேளாண் துறையில் மோசமான கடனாக 7.7 சதவீதமும் இருக்கிறது
வங்கிகள் எதிர்பார்ப்பு
நாடு முழுவதும் திரும்பச் செலுத்தப்படாத அக்ரிகல்ச்சர் அட்வான்ஸ் 23 முதல் 30 சதவீதத்தில் உள்ளது. Non Performing Asset அதிகரித்து வருவதால் விவசாயக் கடன் தள்ளுபடியை எதிர்கொள்ள வேண்டிய சூழல் வங்கிகளுக்கு ஏற்பட்டள்ளது. அதனால் மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன.
கடன் தள்ளுபடி வரலாறு
சமீப காலமாக வேளாண் கடன்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. 2008 ஆம் ஆண்டு மத்திய அரசு கடன்களை தள்ளுபடி செய்தது. 2014 ஆம் ஆண்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் புதிதாக பதவியேற்ற அரசுகளும், 2016 இல் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசும் வேளாண் கடன் தள்ளுபடியை அறிவித்தது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடந்த ஆண்டு கடன்கள் தள்ளுபடி செய்தன
கோடியில் தள்ளுபடி
உத்தரப்பிரதேசத்தில் 36,000 கோடி ரூபாய் பண்ணைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா அரசு 34,000 கோடி ரூபாயை தள்ளுபடி செய்த நிலையில், 2017-18 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 1500 கோடி தள்ளுபடி செய்யப்படும் என பஞ்சாப் அரசு அறிவித்தது. கர்நாடகா அரசு கூட்டுறவு வங்கிகளில் இருந்த வேளாண் கடன் 8,100 கோடி ரூபாயை தள்ளுபடி செய்தது.
வாக்குறுதிகள்
தேர்தல் நடைபெறவுள்ள தெலுங்கானா மற்றும் தேர்தலை எதிர்நோக்கியுள்ள பிற மாநிலங்களில் கடன் தள்ளுபடிக்கான வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிக்கும்போது வாக்குறுதி கட்டாயம் வழங்கப்படும். இதில் கிட்டத்தட்ட 40,000 கோடி ரூபாயிலிருந்து 90,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிகிறது.
சூழலில் வங்கி
கடன் தள்ளுபடிகளால் பணவீக்கம் மற்றும் நிதிப்பற்றாக்குறையைச் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இது ஏற்கனவே கடன் பெற்றுள்ள வங்கிகளுக்கும் தலைவலியை உருவாக்கிவிடும் ஆபத்து உள்ளது.
பாதிப்பு இல்லை
இதுபோன்ற தள்ளுபடிகள் பொருளாதார வல்லுநர்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஆனால் வேளாண் கடன் தள்ளுபடியால் MFIadvane இல் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தரவுகள் இல்லை என்று கிரீடிட் அக்சஸ் கிராமின் லிமிடெட்டின் முதன்மை நிதி அதிகாரி திவாகர், NPFC-MFI 99 சதவீதத்துக்கு மேல் ரீபேமண்ட் ரேட்டை கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications