புதுசா பண்ணாத்தான் புரியும் இந்த புடலங்கா அரசுக்கு..மோடி கண்ணுல தண்ணி வரவச்ச விவசாயி.!

தர்ணா இல்லை, ஆர்ப்பாட்ட இல்லை, தீக்குளிக்க முயற்சி பண்ணலை ஆனா மத்திய, மாநில அரசுகள் கண்ணுல தண்ணி வர வச்சுட்டாரு. பிரதமருக்கு அனுப்புன ஒரே ஒரு மனி ஆர்டர்ல மத்திய, மாநில அரசுகள் ஆடிப்போய் விட்டது. அவசரமா ஒரு கூட்டத்தைக் கூட்டி டிரான்ஸ்போர்ட் சப்ஸிடியும், ஏற்றுமதி மானியமும் கொடுக்கிறதா முன் வந்துள்ளது மகாராஷ்டிர அரசு.

 பிரதமருக்கு மனியார்டர்

பிரதமருக்கு மனியார்டர்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த சாத்தே என்ற அந்த விவசாயி 750 கிலோ வெங்காயத்தை எடுத்துக்கிட்டு மொத்த கொள்முதல் சந்தைக்கு போறாரு. அங்க கிலோ ஒரு ரூபாய் மேனிக்கு விலை பேசிருக்காங்க. அவங்கட்ட அவர் நடத்திய போராட்டத்தால கிலோவுக்கு தலா 40 பைசா வீதம் கூட்டிகொடுத்துருக்காங்க. அதிர்ச்சியடைந்த அந்த விவசாயி எந்த விதமான அற்பமான முடிவுக்கும் போகல. விற்பனையில் கிடைத்த 1,064 என்ற அந்த சொற்ப தொகையை பிரதமரின் பேரிடர் நிவாரணை நிதிக்கு அனுப்பி வச்சாரு. அப்புறம் என்ன....

அமைச்சர் அவசர ஆலோசனை

அமைச்சர் அவசர ஆலோசனை

அம்பானிக்கும் ஒரு இந்தியா, விவசாயிகளுக்கு ஒரு இந்தியாவை படைத்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல்காந்தி வெங்காய விவசாயிகளின் கோபத்தைச் சுட்டிக்காட்டி சவட்டு சவட்டு சவட்டினார். இந்த நிலையில்தான் மகாராஷ்டிர மாநில மார்க்கெட்டிங் மற்றும் பெடரேசன் துறை அமைச்சர் சுதர்பாகாட், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அவசரமா அழைத்து ஆலோசனை நடத்தினார்.

மானியம் வழங்க முடிவு

மானியம் வழங்க முடிவு

வெங்காய விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு எந்த கட்டணமும் விதிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள 5 சதவீத வெங்காய ஏற்றுமதி மானியத்தை 10 விழுக்காடாக உயர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

டிரான்ஸ்போர்ட் சப்ஸிடி

டிரான்ஸ்போர்ட் சப்ஸிடி

வெங்காயத்துக்கான டிமாண்ட் அதிகமாக இருந்தும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பரிசீலித்த அமைச்சர், மொத்த டிரான்ஸ்போர்ட் காஸ்ட்டில், 30,000 ரூபாயோ அல்லது 50 சதவீதமோ மானியமாக கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார்.750 முதல் 1000 கிலோமீட்டருக்கு குறைவான தூரத்துக்கும் மானியம் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.

 30 லட்சம் டன் தேக்கம்

30 லட்சம் டன் தேக்கம்

தற்போதைய நிலவரம் மகாராஷ்டிராவில் கலவரமாக உள்ளது. நாசிக் மார்க்கெட்டி ஒரு குவிண்டால் வெங்காயம் 300 ரூபாயிலிருந்து 400 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. விலை உயராததால் 30 லட்சம் டன் வெங்காயம் விற்பனையாகமல் அழகி வருகிறது. பெங்களூரு, பெல்கான் மற்றும் இந்தூரில் வெங்கயத்துக்கு டிமாண்ட் இருந்தும் மகாராஷ்டிராவில் இந்த நிலைமை.

புதுசா பண்ணுங்க புரியும்

புதுசா பண்ணுங்க புரியும்

கத்தியின்றி ரத்தமின்றி செய்த மகாராஷ்டிரா வெங்காய விவசாயியின் போராட்டம் புது மாதிரியானது. இனிமேல் நீங்க புடலங்கா, கத்தரிக்காய எல்லாம் பார்சலா அனுப்பங்க. ஏன்னா புதுசு புதுசா பண்ணாத்தான் நம்ம கவர்ன்மெண்டுக்கு புரியும் போல.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+