மூன்று ஆண்டுகளில் நாளொன்றுக்கு மூணு வங்கிகளில் நடந்த நாலு மொள்ளமாரித்தனம் புட்டு வைத்த ரிசர்வ் வங்கி

By Soornamani Ramamoorthy
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சொல்லுவது ரொம்ப சுலபம். செய்வதுதான் கஷ்டம். நாட்டு நலனுக்காக கடினமான சீர்திருத்தங்களை எடுக்கக்கூடிய கறாரான பேர்வழி என பேசிவரும் பிரதமர் மோடி இந்த ரகம்தான். உலக அரஙகைப் பற்றி நாக்கூசாமல் கூவுகிற அவர் உள்நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியவில்லை. கடந்த 3 வருஷமா வங்கிகளில் நடைபெறும் மொள்ளமாரித்தனம் படுபயங்கரமானது.

 

நாளொன்றுக்கு 3 வங்கிகளில் கொள்ளை

நாளொன்றுக்கு 3 வங்கிகளில் கொள்ளை

2015-2016 ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூன் மாதம் வரை, இந்திய வங்கிகளில் 168.72 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இது அவ்வப்போது நடந்த கொள்ளையோ திருட்டோ இல்லை. ஒவ்வொரு நாளும் 3 வங்கிகள் நடைபெற்று வந்த இந்த திருட்டுத்தனம், மூன்று ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருந்ததாக இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது..

டாப்ல பீகார்

டாப்ல பீகார்

கொள்ளை, கூட்டுக்கொள்ளை, லாக்கரை உடைத்து திருடுதல் மற்றும் களவு என, வங்கிக் கொள்ளையில் மொத்தம் 3,167 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த பட்டியல்ல டாப்ல இருப்பது பீகார் மாநிலம்தான். பீகாரில் 10 சதவீத வங்கிக்கொள்ளையும், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் 9 சதவீத கொள்ளையும் நடைபெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 7 சதவீதம், ராஜஸ்தானில் 6 சதவீதம் என, 50 சதவீத வழக்குகள் இந்த 6 மாநிலங்களில் பதிவாகியுள்ளன.

51 சதவீதம் கொள்ளை
 

51 சதவீதம் கொள்ளை

மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் 51 சதவீத வங்கிக் கொள்ளை நடைபெற்றுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட மொத்த தொகை 7.27 கோடி ரூபாய்.

 கொள்ளையும்- வழக்குகளும்

கொள்ளையும்- வழக்குகளும்

பீகாரில் 8.22 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 332 வழக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 13.87 கோடி ரூபாய் கொள்ளைபோன புகாரில் 293 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 6.43 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதில் 292 வழக்குகளும் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் 22.29 கோடி ரூபாய் கொள்ளை போனது. இதில் 227 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. ஆந்திராவில் ரூ.15.69 கோடி, கர்நாடகாவில் ரூ.15.27 கோடி கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 10.34 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 79 வழக்குகள் பதிவாகியுள்ளன.

 ரொம்ப யோக்கியம்

ரொம்ப யோக்கியம்

கேரளா, கோவா, மேகாலயா, தெலுங்கானா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் நீங்கலாக மற்ற மாநிலங்களில் தலா 1 கோடி ரூபாய் வரைக்கும் வங்கி கொள்ளை நடந்துள்ளது. புதுச்சேரி, மிசோரம் மாநிலங்களில் தலா ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. ஆனால் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்படவில்லை. கொள்ளை முயற்சி நடக்கும்போதே திருட்டுப் பசங்களை விரட்டிருக்காங்க போல

 ஏடிஎம்- டெபிட் கார்டு மோசடி

ஏடிஎம்- டெபிட் கார்டு மோசடி

ஏ.டி.எம், டெபிட் கார்டு மூலம் 111.71 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது . இது தொடர்பாக 2,468 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு கொள்ளை நடந்திருக்குதே, இனிமேலும் ரிசர்வ் வங்கிக்கிட்ட 3 லட்சம் கோடிய கேப்பே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian banks are looted during Modi government

Indian banks are looted during Modi government
Story first published: Saturday, December 8, 2018, 10:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X