என்னது நான்கு RBI கவர்னர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்களா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உர்ஜித் படேல், RBI - ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து டிசம்பர் 10, 2018-ல் ராஜினாமா செய்தார். ஆர்பிஐ கவர்னர் மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ராஜினாமா செய்வது நான்காவது முறை. இந்தியாவில், இதுவரை ஆர்பிஐ கவர்னர் பதவியை ராஜினாமா செய்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்.

 

முதல் பதவி விலகல்

முதல் பதவி விலகல்

1935 - 1937 வரை பதவியில் இருந்து வெள்ளைக்கார துரை சர் ஆஸ்பார்ன் ஸ்மித் (Sir Osborne Smith) தான் இந்தியாவின் முதல் ஆர்பிஐ கவர்னர். ஆம் 1935-ல் தான் ஆர்பிஐ ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவுக்கு ஒரு மத்திய வங்கியாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட உடனேயே முதன்முதலில் நியமிக்கப்பட்டவர் ஏன் பதவி விலகினார் ட்தெரியுமா..?

என்ன் காரணம்

என்ன் காரணம்

வட்டி விகித சாமாச்சாரங்கள் (Interest Rate) மற்றும் அந்நிய செலாவணி மாற்ற விலை நிர்ணயங்களில் (Exchange Rate) காலனி அரசுடன் ஏற்பட்ட முரண்பாடால் பதவி விலகினார். இவர் ஆர்பிஐ கவர்னராவதற்கு முன் இன்றைய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர்.

பனகல் ராமா ராவ்
 

பனகல் ராமா ராவ்

இந்திய வரலாற்றிலேயே அதிக நாட்கள் ஆர்பிஐ கவர்னராக பணியாற்றிய பெருமைக்குரியவர். 1949 - 1957 வரை 7 ஆண்டு 6 மாதம் 14 நாட்கள் இந்தப் பதவியில் இருந்தார். இவர் பதவி காலத்தில் தான் திட்டக் குழு அமைத்தல், இந்தியா முழுமைக்கும் கூட்டுறவு கடன் திட்டங்களைக் கொண்டு வருவது, தொழிற்சாலைகளுக்கான கடன்களை விரிவாக்கம் செய்வது போன்ற பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தார். இவர் ஒரு முன்னால் ஐஏஎஸ் (அன்றைய ஐசிஎஸ்) அதிகாரி. சுதந்திர இந்தியாவின் முதல் ஆர்பிஐ கவர்னர் ராஜினாமா செய்ததும் இவர் தான்.

ஆர்பிஐக்கு முன்

ஆர்பிஐக்கு முன்

அமெரிக்க நாட்டுக்கான இந்திய தூதர், ஜப்பான் நாட்டுக்கான இந்திய தூதர், Port Trust of India-வின் தலைவர் பதவிகளில் பணியாற்றியவர். இவர் அன்றைய நிதி அமைச்சர் டி டி கிருஷ்ணமாச்சாரியை எதிர்த்துப் பேசிய பேச்சில் நேருவே தலையிட்டு பஞ்சாயத்து பேசினார். "ஆர்பிஐ நிதி அமைச்சகத்துக்கு கீழ் இருக்கும் ஒரு துறை தான்" என நேருவே கடுமையாக பேசினார். அந்த அளவுக்கு அரசுக்கும் ஆர்பிஐக்கும் அன்றே புகைச்சல் இருந்தது. அதன் பின் தான் பதவி விலகினார்.

எஸ் ஜகன்நாதன்

எஸ் ஜகன்நாதன்

இந்திய வரலாற்றில் மத்திய அரசுடன் பிரச்னை இல்லாமல் பதவியை ராஜினாமா செய்தவர். பன்னாட்டு நிதியத்தில் இவருக்கு இந்தியல் செயல் இயக்குநர் பதவி கிடைத்ததால், ஆர்பிஐ கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். 1969-ல் தான் இந்தியாவின் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆர்பிஐ-ன் பொருப்பு பன் மடங்கு கூடியதை கவனமாக இருந்து பார்த்துக் கொண்டவர்.

நல்ல காரியங்கள்

நல்ல காரியங்கள்

இவர் காலத்தில் தான் Credit Guarantee Corporation of India என்றழைக்கப்படும் வங்கிகளில் போடும் பணத்துக்கான உத்தரவாத அமைப்பை நிறுவி, இந்திய வங்கிகள் மீது மக்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் நம்பிக்கை கொண்டு வந்தவர். இவர் பதவிக் காலத்தில் தான் சிறந்த பணக் கொள்கைகளை (Monetary Policy) கொண்டு வந்தார். விலை வாசியையும் சர்வதேச எண்ணெய் விலைத் தடுமாற்றத்துக்கு மத்தியில் கட்டுக்குள் வைத்திருந்தவர். இவரும் ஒரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தான். ஆர்பிஐக்கு வருவதற்கு முன் உலக வங்கியின் செயல் இயக்குநர் பதவியில் இருந்தவர்.

உர்ஜித் படேல்

உர்ஜித் படேல்

கென்யா வாழ் NRI. வெளிநாடு வாழ் இந்தியர், லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் இளநிலைப் பட்டம், ஆக்ஸ்ஃபோர்டில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். 1990-ல் ‘யேல்' பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஆரம்பத்தில் சர்வதேச நிதி ஆணையத்தில் பணிபுரிந்தார். 1995-க்குப் பின் இந்தியாவின் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தார். ரிலையன்ஸ் உட்பட. 2013-ல் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக நியமிக்கப்பட்டார்.

ஆர்பிஐ கவர்னர்

ஆர்பிஐ கவர்னர்

மத்திய அரசின் நிதிக் கொள்கைகள் குறித்து வெளிப்படையான விமர்சனங்களை முன்வைத்த ரகுராம் ராஜனின் பதவிக் காலத்தை நீட்டிக்க பாஜக அரசு விரும்பவில்லை. ஆக 2016-ல் உர்ஜித் படேல் அடுத்த மூன்றாண்டுகளுக்கு ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார்.

திறமைக்குச் சான்று

திறமைக்குச் சான்று

பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி - ஜிஎஸ்டி, பஞ்சாப் நேஷனல் பேங்க் மோசடி, ஐ.எல்.எஃப்.எஸ் மோசடி, வங்கிசாரா நிதி நிறுவனங்களின் பண நெருக்கடி போன்ற உள்நாட்டு பிரச்னைகள். ப்ரெக்சிட் (Brexit), கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, அமெரிக்க-சீன வர்த்தக யுத்தம் போன்ற சர்வதேச சிக்கல்களுக்கு இடையிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியது உர்ஜித்தின் பொருளாதார அறிவுக்குச் திறமைக்குச் சான்று.

ராஜினாமா ஏன்

ராஜினாமா ஏன்

தனிப்பட்ட காரணங்களுக்காக என் பதவியை ராஜினாமா செய்கிறேன் என முடித்துவிட்டார் உர்ஜித். பணமதிப்பிழப்புக்கு முட்டு கொடுக்கவில்லை என மத்திய அரசின் கோபம், மத்திய அரசு காலில் விழுந்து கெஞ்சியும் வட்டி விகிதங்களை குறைக்காதது, Prompt Corrective Action என்கிற வலுவற்ற வங்கிகள் கடன் தருவதை நிறுத்தி கடனை வசூலிக்க வலியுறுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்து கார்ப்பரேட் மோடி அரசை இம்சித்தது, ஆர்பிஐ அமைப்பின் ரிசர்வ் தொகைகளை கேட்டு தொந்தரவு செய்தது, வாராக் கடன் உள்ள நிறுவனங்களை எதிர்த்து வழக்கு தொடர்து அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் வென்றது, உர்ஜித் படேலின் தொல்லை தாங்காமல் இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஆர்பிஐ சட்டம் பிரிவு 7-ஐ மத்திய அரசு பயன்படுத்தியது போன்ற ஆறு முக்கிய நல்ல விஷயங்களை செய்ய விடாமல் தொந்தரவு செய்த காரணத்துக்கு தான் பதவி விலகினார். காரணங்களை விவரமாகபடிக்க க்ளிக்கவும்:

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rbi
English summary

List of RBI governors who resigned from the post before their term

List of RBI governors who resigned from the post before their term
Story first published: Saturday, December 22, 2018, 12:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X