சென்னை: கடந்த ஆகஸ்டு மாதம் 22 ஆயிரத்துக்கு விற்ற தங்கத்தின் விலை இன்று மட்டும் படிப்படியாக உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 25 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது.
தற்போது சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரத்தைத் தொட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 3 ஆயிரத்து 121, ஒரு சவரன் 24 ஆயிரத்து 968 ரூபாய் என்பதால், தங்கம் வாங்க சென்ற மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தங்கம் விலை ஏற்றுமதி, இறக்குமதி, மக்கள் வாங்கும் காரணம் இவைகளை உள்ளடக்கி நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும், தங்கத்தின் மீதான வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பு மாறுபாடு இவைகளும் தங்கம், வெள்ளியின் விலை மாறுபாட்டுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
தமிழகத்தை பொறுத்தவரையில் ஆக்ஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் தங்கம் வாங்குவதை மக்கள் அவ்வளவாக விரும்பாத காரணத்தால் சிறிய அளவில் தங்கத்தின் விலை குறையும். கடந்த சில மாதங்களாக 22 லிருந்து 24 ஆயிரம் ரூபாயைத் தொட்ட தங்கம், இன்று 24 ஆயிரத்து 968 ரூபாய் என்று கிட்டத் தட்ட 25 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது.
வீட்டில் சவரன் தங்கம் வைத்திருப்பவர்கள் லட்சாதிபதி எனும் நிலை உருவாகி உள்ளது.


Click it and Unblock the Notifications