HDFC - Housing Development and Finance Corporation என்கிற அமைப்பு தான்ன் இந்தியாவின் மிகப் பெரிய அடமானக் கடன் (Mortgage Loan) வழங்குபவர். இந்திய பங்குச் சந்தையில் 3.30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட பெரிய நிறுவனம். அடமானக் கடன் கொடுக்கும் இரண்டாவது நிறுவனம் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் தான் இவரின் இந்திய சந்தை மதிப்பு 28,000 கோடி ரூபாய் தான். என்றால் HDFC இந்தியாவில் எத்தனை பெரிய நிறுவனம் என்பது புரிய வரும்.
காலாண்டு லாபம்
இன்று ஜனவரி 29, 2018 செவ்வாய்கிழமை அன்று மதியம் 2.15 மணிக்கு HDFC நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியாயின. அதில் 2018 - 19 நிதியாண்டுக்கான டிசம்பர் காலாண்டில் 2,113 கோடி ரூபாயை நிகர லாபமாகக் கட்டி இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டில்
2017 - 18 நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் இதே HDFC நிறுவனம் 5,263 கோடி ரூபாயை நிகர லாபமாகக் கணக்கு காட்டி இருந்தது. 2017 டிசம்பர் காலாண்டில் HDFC லைன் இன்ஷூரன்ஸ் மற்றும் HDFC மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களின் பங்குகளை விற்றதால் தான் பிசினஸல்லாத வருமானம் கூடுதலாகக் கிடைத்தது. அதனால் தான் நிகர லாபம் 5250 கோடிக்கு மேல் போனதாம்.
வருவாய் அதிகரிப்பு
வங்கி நடவடிக்கைகள் மூலம் டிசம்பர் 2018 காலாண்டில் 10,450 கோடி ரூபாய் வருவாயாக வந்திருக்கிறதாம். இது கடந்த டிசம்பர் 2017 காலாண்டில் ஈட்டிய 8,678 கோடி ரூபாயை விட 20 சதவிகிதம் கூடுதல் தொகை.
நிகர வட்டி வருமானம்
2018 - 19 நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் நிகர வட்டி வருமானமாக 3,192 கோடி ரூபாயை ஈட்டி இருக்கிறது HDFC. கடந்த டிசம்பர் 2017 காலாண்டில் நிகர வட்டி வருமானமாக 2,737 கோடி ரூபாயை ஈட்டி இருந்தது. ஆக வருவாய் அதிகரிப்பான 20 சதவிகிதத்தில் சுமார் 16 சதவிகிதம் வங்கி வட்டி மூலமாக மட்டுமே கிடைத்திருக்கிறதாம்.
பங்கு விலைச் சரிவு
கடத ஜனவரி 21, 2019-ல் இருந்தே HDFC நிறுவன பங்குகளின் விலை சுமார்வ்2,150 ரூபாயில் இருந்து இறங்குமுகமாக இறங்கிக் கொண்டே தான் இருக்கிறது. தற்போது 2,060 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.
விளக்கம்
முதலீட்டாளர்களை தைரியப்படுத்தி தங்கள் நிறுவனப் பங்குகளை விற்காமல் இருக்க HDFC நிறுவன அதிகாரிகள் முதலீடுகளை விற்றதால் தான் கடந்த ஆண்டில் நிகர லாபம் பயங்கரமாக அதிகரித்தது என விளக்கி வருகிறர்கள். அதோடு தங்கள் வங்கி இயக்கத்தில் காட்டி இருக்கும் எண்களையும் சுட்டிக் காட்டி இது தங்கள் சரிவல்ல, வலர்ச்சி எனவும் பேசி வருகிறார்கள்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications