இந்தியாவின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.8 சதவிகிதமாக உயரும் என்றும் இது சீனாவை விட அதிகம் என்று ஐஎம்எஃப் கணித்துள்ளது. சீனாவின் ஜிடிபி 6.8 சதவிகிதம் மட்டுமே என்றும் கணிக்கப்பட்
கடந்த 2015-16ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.6 சதவிகிதமாக பதிவானதன் மூலம் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற நாடாக இந்தியா முன்னேறியது.
2016-17ம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவிகிதம் 8 ஆக இருக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் கணித்தது. ஆனால் பணமதிப்பு நீக்கத்தினால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவிகிதம் பாதிப்புக்கு ஆளானது. மார்ச் மாதம் முடிந்த 2016-17 நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1சதவிகிதம் ஆக வளர்ச்சியடைந்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி
இந்தியாவின் ஜிடிபி எனப்படும் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் குறித்து கடந்த ஆண்டு கணித்த சர்வதேச நாணய நிதியம், இந்தியா பொருளாதார வளர்ச்சி விழுந்து பின்னர் மீண்டு எழும் என்று தெரிவித்தது. 2018 -19ஆம் நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவிகிதமாக சரிவடையும் என்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் சீராக வளர்ச்சியடையும் ஜிடிபி 2021 - 22ஆம் நிதியாண்டில் 8 சதவிகித வளர்ச்சியை எட்டும் என்று ஐஎம்எப் கணித்தது. ஆனால் இந்திய நிதித்துறை அமைச்சகமோ இன்னும் 5 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரட்டை இலக்கத்தை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஜிடிபி 7.4 சதவிகிதம்
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2018-19 ஆம் நிதியாண்டில் 7.4 சதவிகிதமாக இருக்கும் என்றும் 2019-20ஆம் நிதியாண்டில் 7.8 சதவிகிதமாக உயரும் என்றும் ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. தொடர்ந்து பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி தற்போது வரை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கணித்துள்ளது.
2019ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் உயருவதற்குக் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் சரிவு போன்றவையே காரணம் என்று கூறப்படுகிறது.
வளர்ச்சிக்கு காரணம்
2016ஆம் ஆண்டு நவம்பரில் உயர்பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் 2017ஆம் ஆண்டு ஜூலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது இந்தியாவின் பொருளாதாரம் சரிவடைந்தது. 2017 ல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவிகிதமாகவும், இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவிகிதமாகவும் இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் முதலீடுகள் மற்றும் கொள்முதல்கள் அதிகரித்துள்ளதால் பொருளாதார வளர்ச்சி உயரும். தொழில் வளர்ச்சியில் இந்தியா குறிப்பிடப்படும்படியாக இடத்தை எட்டி உள்ளது. ஜிஎஸ்டி அமல் தற்போது இந்திய முதலீட்டை பலப்படுத்தி உள்ளது. வளர்ச்சிக்கும் இது முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி
சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2019 மற்றும் 2020 ம் ஆண்டுகளில் 6.2 சதவிகிதமாக சரிவடையும். 2021 ல் இது 6 சதவிகிதமாக குறையும் என்றும் கணித்துள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி சரிவுக்கு அமெரிக்க இடையிலான வர்த்தகப் போர் முக்கியக் காரணமாக உள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்தாலும் ஆசிய மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சி 2019ஆம் ஆண்டு 6.8 சதவிகிதத்திலிருந்து 6.3 சதவிகிதமாகச் சரியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பாஜக ஆட்சிக்கு சாதகமா
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவிகிதம் ஆக உயரும் என உலக வங்கி கணித்திருந்தது. தற்போது 6.7 % ஆக உள்ள பொருளாதார வளர்ச்சி 7.3% ஆக உயரும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்திற்கான உலக பொருளாதார வளம் தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் தொடர்ந்து பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளதாக உலக வங்கியின் அறிக்கை கூறியது. அதே போலசர்வதேச பொருளாதார ஆய்வறிக்கையில் 2019ஆம் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளும் என்று தெரிவித்திருந்தது. இதனை அடுத்து வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்திய அறிக்கைகள் ஆளும் பாஜக அரசுக்கு சாதகமானதாக அமையும் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications