இங்கிட்டு பாஜக-க்கு நன்கொடை, அங்கிட்டு SBI வங்கியை ஏமாற்றி ரூ.11500 கோடி சுருட்டிய தனியார் நிறுவனம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Dewan Housing Finance Ltd (DHFL), இந்த நிறுவனம் தான் இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கிகளிடம் கடன் வாங்கி அல்வா கிண்டி இருக்கிறது. சுமார் 97,000 கோடி ரூபாய் வரை பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கி இருக்கிறது DHFL. குறிப்பாக 50,000 கோடியை பல்வேறு இந்திய அரசு வங்கிகளிடம் கடன் வாங்கி இருக்கிறது. இந்த ஏமாற்று நிறுவனத்துக்கு எஸ்பிஐ சுமார் 11,500 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறது. இந்த உண்மையை கோப்ராபோஸ்ட் எனும் அமைப்பு வெளியிட்டிருக்கிறது.

 

புகார்

புகார்

1. DHFL நிறுவனத்தின் நிறுவனர் வாதவான் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி போலி நிறுவனங்களுக்கு 14,300 கோடி ரூபாய் கடன் கொடுத்தது, கறுப்புப் பணமாக பதுக்கி இலங்கயில் ஒரு கிரிக்கெட் டீம் வாங்கியது, வெளிநாடுகளில் பலரின் பெயரில் சொத்துக்களை வாங்கியது.
2. பாஜகவுக்கு போலி நிறுவனங்கள் மூலம் சுமார் 19.5 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தது.
3. இன்சைடர் டிரேடிங் (நிறுவன உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தெர்நித ரகசியங்களை பகிர்ந்து பங்கு விலை ஏற்றத்தில் காசு பார்பப்து) மூலம் 1,000 கோடி ஏமாற்றியது.

அள்ளிக் கொடுத்தார்

அள்ளிக் கொடுத்தார்

ஒரே முகவரியில் உள்ள 34 போலி நிறுவனங்களுக்கு சுமார் 14,300 கோடி ரூபாயை எந்த ஒரு பிணை அல்லது ஒழுங்கான விசாரணை கூட இல்லாமல் கடன்களை ஒரே தவணையில் கொடுத்திருக்கிறது. பொதுவாக பிசினஸ் கடன்களுக்கு பல்வேறு தவணைகளாக வேலை நடப்பதை உறுதி செய்து கொண்டு தான் நிதி நிறுவனங்கள் வழங்கும். ஆனால் இங்கு எல்லா போலி நிறுவனங்களுக்கு ஒரே தவணை தான்.

 வாராக் கடன்
 

வாராக் கடன்

மேலே சொன்ன பெரும்பாலான நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த அடுத்த நான்காவது மாதமே நேரடியாக வாராக் கடன்களாக அறிவிக்கப்படுகிறது. ஒரு தவணையைக் கூட ஒழுங்காக கட்டவில்லை அந்தப் போலி நிறுவனங்கள். குறிப்பாக ஷிவ சேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஹிதேந்திரா ஜெயின் இயக்குநராக இருக்கும் சஹானா குழும நிறுவனங்கள்.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் குஜராத்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் திட்டங்களை முழுமையாக விசாரிக்காமல் சுமார் 1,160 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்கள். அதே போல் கர்நாடகத்தைச் சேர்ந்த சில நிறுவனங்களுக்கும் பிசினஸைப் பற்றி முறையாக விசாரிக்காமல் 1,300 கோடி கடன் வழங்கி இருக்கிறார்களாம். அதோடு கெலாக்ஸி, சிலிகான், ஹெமிஸ்பியர் ஆகிய மூன்று நிறுவனங்கள் தான் வாதவானின் கடன் ஊழலுக்கு உடந்தையாக இருந்தவைகளாம்.

நன்கொடை

நன்கொடை

நிறுவனச் சட்டம் (Companies Act) 2013-ன் படி லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள் மட்டும் தான் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க வேண்டும். அதுவும் நிறுவனம் ஈட்டிய மொத்த நிகர லாபத்தில் (Net Profit) அதிகபட்சமாக 7.5% மட்டுமே வழங்க வேண்டும் என தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால் RKW Developers, Skill Realtors and Darshan Developers ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த போதும் பாஜகவுக்கு நன்கொடை கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

DHFL bought 50000 crore loan from Indian government banks fraud exposed by cobrapost

DHFL bought 50000 crore loan from Indian government banks fraud exposed by cobrapost
Story first published: Thursday, January 31, 2019, 11:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X