ஆதார் இல்லையா, அப்ப இந்த 2,000 ரூபாய் கிடையாதுப்பு..? தலை தூக்கும் ஆதார்..!

பியுஷ் கோயல் தன் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி என்கிற பிரமாண்ட திட்டத்தை அறிவித்தார், அதன் படி 2 ஹெக்டேருக்குக் கீழ் உழவு நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் 3 தவனைகளாக கொடுக்கப்படும் என்றார்கள்.

அந்த திட்டத்தி கீழ் முதல் தவணை நிதி கொடுக்கக் கூட மத்திய அரசில் இருந்து பட்டியல் கேட்டு மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மாநில விவசாயத் துறை அமைச்சக செயலர்களுக்கு கடிதங்கள் பறந்துவிட்டன.

முதல் தவணைக்கான 20,000 கோடி ரூபாய் கூட தயார், பட்டியல் வந்தது வழங்கத் தொடங்கி ஓட்டை அள்ளி விட வேண்டியது தான் எனத் தயாரக இருக்கிறார்கள்.

ஐடி கார்டுகள்

ஐடி கார்டுகள்

விவசாயிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த முதலில் ஆதார் அட்டையைத் தான் சொல்லி இருந்தார்கள். ஆனால் அட்டை இல்லாத விவசாயிகளையும் (ஒட்டுக்கள்) கருத்தில் கொண்டு ஏதாவது ஒரு அரசு அடையாள அட்டை இருந்தால் போதும் என இறங்கி வந்திருக்கிறார்களாம். இப்போது ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை என மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி இருக்கும் அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை காட்டிப் பெறலாமாம்.

அது இருந்தே ஆகணுமா..?

அது இருந்தே ஆகணுமா..?

ஆதார் மூலம் தான் இந்தியர்களின் தனித் தன்மையை சரி பார்க்க முடியும். மற்ற அடையாள அட்டைகளில் கூட போலி அட்டைகள் இருக்கலாம். ஆனால் ஆதாரில் போலி அட்டை இருக்கவே இருக்காது என்பதால் தான் ஆதாரைக் கேட்கிறார்களாம். ஒரே நபர் இரு முறை இந்த திட்டத்தின் கீழ் பணத்தைப் பெற்றுவிடக் கூடாது என மத்திய அரசு, மாநில அரசுகளை அழுத்தமாகச் சொல்லி இருக்கிறதாம்.

இவர்களுக்கு மட்டும் தான்

இவர்களுக்கு மட்டும் தான்

ஒரு குடும்பத்தில் (அப்பா, அம்மா, மகன், மகள்) என ஒட்டு மொத்த குடும்பமாக 2 ஹெக்டேருக்குள் உழவு நிலம் இருக்க வேண்டுமாம். அப்போது தான் இந்த 2,000 ரூபாயாம். அதே போல் பிப்ரவரி 01, 2019 அன்று யாரிடம் (எந்த குடும்பத்திடம்) உழவு நிலம் இருக்கிறதோ அந்த குடும்பத்துக்கு தான் அந்த 2,000 ரூபாயாம். அப்படி பிப்ரவரி 01, 2019க்குப் பிறகு நிலம் மாற்றினால் கூட அடுத்த ஐந்து வருடத்துக்கு இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற முடியாதாம்.

18 பட்டியும் சேர்த்து

18 பட்டியும் சேர்த்து

ஒரு விவசாய குடும்பத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் வெவ்வேறு கிராமங்கள் இருந்தால், அவருடைய (அந்த குடும்பத்துடைய) மொத்த நிலங்களும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் பிரதமர் விவசாய திட்டத்தின் கீழ் பணம் கொடுக்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+