“மோடியின் திட்டம் முழுக்க முழக்க வீண் தான்” முன்னாள் திட்டக் குழு உறுப்பினர் அபிஜித் சென்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தில்லி: அபிஜித் சென், தில்லியின் வரலாற்று சிறப்பு மிக்க ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக இருக்கிறார். இவர் முன்னாள் திட்டக் குழுவில் உறுப்பினராகவும் இடம் பிடித்திருக்கிறார்.

 

மத்திய அரசின் பல்வேறு விவசாயம் மற்றும் அதற்கான விலை நிர்ணயக் கமிட்டிகளில் உறுப்பினராக இருந்திருக்கிறார். அதோடு மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா போன்ற மாநில திட்டக் குழுக்களிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு, ஐநா சபையின் மேம்பாட்டுத் திட்டக்கள், ஐநாவின் உனவு மற்றும் விவசாய அமைப்பு, OECD என பல்வேறு சர்வதேச அமைப்புகளிலும் உறுப்பினராகவும், ஆலோசகராகவும் இருந்திருக்கிறார்.

Press meet

Press meet

சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் மனிதர் மோடியையும், மோடியின் திட்டங்கள் மற்றும் இடைக்கால பட்ஜெட் வரை எல்லாவாற்றையும் வெளுத்து வாங்கி இருக்க்கிறார். இனி அவர் மொழியில். முதலில் பட்ஜெட்டையே தாக்கத் தொடங்குகிறார். பட்ஜெட்டை ஒரு ஆண்டுக்கான பட்ஜெட் ஆக அறிவிக்காமல் பாஜக தன் தேர்தல் வாக்குறுதிப் பட்டியல் போல எல்லா தரப்பு மக்களையும் கவர பயன்படுத்திக் கொண்டது. இது ஒரு பட்ஜெட்டாகவே எனக்குத் தெரியவில்லை என மோடி மீது குற்றம் சுமத்துகிறார்.

Violations

Violations

அதனைத் தொடர்ந்து "பாஜக தான் பட்ஜெட் மரபுகள் மற்றும் வரம்புகளை மீறி வருமான வரித் துறைகளில் மாற்றம் செய்தது, விவசாயிகளுக்கான திட்டங்களை அறிவித்து அதை ஆண்டு பட்ஜெட் வருவதற்குள்ளேயே செயல்படுத்த துடிப்பது என எல்லாமே விதிமீறல்கள் தான்"

Before Election
 

Before Election

மேலும் "வரும் மக்களவைத் தேர்தல் காலத்துக்குள் முதல் தவணையை விவசாயிகளுக்கு கொண்டு சென்று சேர்த்துவிட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. ஆனால் இது சாத்தியமே இல்லை. அதுவும் அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் நடக்கவே நடக்காது. காரணம் மாநில அரசுகள் மத்திய அரசு கேட்கும் பட்டியலைத் தயார் செய்யவே சில மாதங்கள் தேவைப்படும். இதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வேகத்தில் வார்த்தைகளை விடக் கூடாது" என்கிறார் அபிஜித்

It is a height of stupidity

It is a height of stupidity

"தெலுங்கானாவிலும் விவசாயிகளூக்கு பணம் கொடுக்கிறார்கள். அவர்கள் ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு இவ்வளவு பணம் எனக் கொடுக்கிறார்கள். ஆக தெலுங்கானாவில் ஒரு நிலமுள்ள விவசாயிக்கு ஒர் ஹெக்டேருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும். ஆக ஒரு ஹெக்டருக்கு இவ்வளவு ரூபாயை விவசாயத்தில் முதலீடு செய்ததாக கருதலாம். ஆனால் மோடி அரசோ முட்டாள் தானமாக ஒரு விவசாய குடும்பத்துக்கு 2000 ரூபாய் என அறிவித்திருக்கிறார்கள். இதை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்வது சொல்லுங்கள்..?" என மோடியை மடக்குகிறார் அபிஜித் சென்.

Expenditure not Investment

Expenditure not Investment

"விவசாயிகளுக்கு நல்லது எனச் சொல்லி சொல்லியே இந்த திட்டத்தை புகழ் பெறச் செய்கிறார்களே ஒழிய, அந்த 6000 ரூபாய் விவசாயத்தில் ஒரு முதலீடாக மாற வாய்ப்பே இல்லையே பிறகு அது எப்படி விவசாயிகளுக்கு நன்மை கொடுக்கும், அந்த திட்டம் எப்படி விவசாயத் திட்டமாகும்" என கிடிக்கிப் பிடி போடுகிறார். அதோடு இது தெலுங்கானா திட்டத்தைப் போல விவசாயக் கூலிகளுக்கு ஒரு விடிவு காலம் கொடுக்கவில்லை. நிலமற்ற விவசாயிகளும் இந்திய விவசாய சமூகத்தில் ஒரு அங்கத்தினர் தான். அவர்களைப் பற்றி யோசிக்காமல் செய்தது மிகப் பெரிய தவறு. இதற்கு விவசாயிகளுக்கு மட்டுமே ஆண்டுக்கு 6000 கொடுப்பதற்கு பதிலாக மொத்த 18 கோடி கிராம புற மக்களுக்கும் ஆண்டுக்கு 6000 கொடுத்திருக்கலாம். என்கிறார் அபிஜித்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

abhijit sen is proving that the pradhan mantri kisan samman nidhi scheme is a stupidity

abhijit sen is proving that the pradhan mantri kisan samman nidhi scheme is a stupidity
Story first published: Wednesday, February 6, 2019, 15:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X