அடம் பிடித்து சாதித்த மத்திய அரசு..? இந்தாங்க உங்க 28,000 கோடி..? உறுதி செய்த ஆர்பிஐ

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய ரிசர்வ் வங்கி அரசுக்கு 28,000 கோடி ரூபாய் இடைக்கால ஈவுத் தொகையாக கொடுக்கத் தயாராகிவிட்டது. நேற்று வரை அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த அந்த 28,000 கோடி ரூபாயை மத்திய அரசு கேட்ட படி கொடுத்து உதவப் போகிறது ஆர்பிஐ.

 

நேற்று ஆர்பிஐ இயக்குநர் குழு கூட்டத்துக்குப் பின் முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் பிமல் ஜலானின் தலைமையிலான கூட்டமே முடிவு செய்யும் எனச் சொன்னார் தற்போதைய ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ்.

ஆனால் நேற்றே கூட்டம் நடத்தப்பட்டு 28,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு கொடுத்து உதவுவது என முடிசெய் செய்திருப்பதாக் இன்று ஆர்பிஐ-ல் இருந்தே செய்திகளும் வெளியாகி இருக்கின்றன.

ஏன் இந்தப் பணம்..?

ஏன் இந்தப் பணம்..?

பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி செய்யத் தொடங்கியதில் இருந்தே நிதிப் பற்றாக்குறை மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை போன் பொருளாதார பிரச்னைகள் கொஞ்சம் ரீயஸாகவே எடுத்துக் கொண்டது. இப்போது கடந்த 2018 - 19 பட்ஜெட்டில் கணித்திருந்த 3.3 சதவிகித நிதிப் பற்றாக்குறை 0.1 சதவிகிதம் அதிகரித்துவிட்டது. குறைந்த பட்சம் 2018- 19 நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறையை 3.4 சதவிகிதத்துடனேயே வைக்கத் தான் பணத்துக்கு திண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆர்பிஐ அமைப்பையும் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருக்கிறது.

இதுவரை எவ்வளவு தொகை..?

இதுவரை எவ்வளவு தொகை..?

2013 - 14-ல் 52,679 கோடி ரூபாய், 2014 - 15-ல் 65,896 கோடி ரூபாய், 2015 - 16-ல் 65,876 கோடி ரூபாய், 2016 - 17-ல் 30,659 கோடி ரூபாய், 2017 - 18-ல் 50,000 கோடி ரூபாய் என ஆர்பிஐ மத்திய அரசுக்கு ஈவுத் தொகைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.

கடந்த நிதி ஆண்டில்
 

கடந்த நிதி ஆண்டில்

2017 - 18-ல் முதல் கட்ட ஈவுத் தொகையாக 40,000 கோடி ரூபாயும், அதன் பின் இடைக்கால ஈவுத் தொகையாக 10,000 கோடி ரூபாயும் கொடுத்தது ஆர்பிஐ. இந்த 2018 - 19 நிதியாண்டுக்கான இடைக்கால ஈவுத் தொகையாக சுமார் 40,000 கோடி ரூபாயை எதிர்பார்த்தது மத்திய அரசு. ஆனால் ஆர்பிஐ அமைப்பிடம் அவ்வளவு பணம் இல்லை என கறாராகச் சொல்லிவிட்டது. அதன் பின் ஒரு வழியாக இப்போது 28,000 கோடி ரூபாயை இடைக்கால ஈவுத் தொகையாக கொடுக்க சம்மதித்திருக்கிறது.

பிமல் ஜலான் கூட்டம்

பிமல் ஜலான் கூட்டம்

நேற்று நடந்த கூட்டத்தில் இந்தியா மற்றும் உலகப் பொருளாதார நிலை, அதில் ஆர்பிஐ பங்கு, இந்த பணத்தைக் கொடுப்பதால் ஆர்பிஐ அமைப்பு பாதிக்கப்படுமா..? போன்ற காரணங்களை ஆலோசித்தே 28,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு கொடுக்க முன் வந்திருக்கிறது ஆர்பிஐ. மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத் தொகை தருவது இது இரண்டாவது முறையாம். இதற்கு முன் கடந்த 2017 - 18-ல் கொடுத்தார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rbi dividend ஆர்பிஐ
English summary

Central government is going to receive its 28000 crore interim dividend from rbi

Central government is going to receive its 28000 crore interim dividend from rbi
Story first published: Tuesday, February 19, 2019, 11:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X