உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் பெறும் நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு முதல் இடம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் பெறும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. கடந்த நான்காண்டுகளில் உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

 

ஒரு நாட்டின் உற்பத்தி திறனுக்கு ஏற்ப உலக வங்கி கடன் வழங்கி வருகிறது. அந்த வகையில் முன்பு இருந்ததை விட இந்தியா அதிக கடன் வாங்குகிறது. இந்தியாவின் உற்பத்தி திறன் அதிகரித்தது மட்டுமல்லாது மற்றொரு காரணமும் உள்ளது. சாலை மேம்பாட்டு பணி, கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்ற உலக வங்கி கடன் வழங்கி வருகிறது. உலக வங்கியிடம் கடன் வாங்கியுள்ள இந்தியா கடனை திருப்பி செலுத்துவதால் அதிக கடனை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாக வாங்கி வருகிறது.

கடந்த 2015 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், உலக வங்கியிடம் இருந்து 72,000 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. 2018 செப்டம்பர் மாத நிலவரப்படி,104 திட்டங்களுக்கு, உலக வங்கியிடம் இருந்து இந்தியா, மொத்தம் 1 லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. அதிக கடனாளி நாடாக இந்தியா திகழ்கிறது.

Also Read | பதஞ்சலி பொருட்களை திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்கிறார்களா..? தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு..!

குறைந்த வட்டியில் கடன்

குறைந்த வட்டியில் கடன்

நிலம், நீர் வளங்களை சரியான முறையில் பயன்படுத்த தேவையான உதவிகளை அளித்து, இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உலக வங்கி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வேலை வாய்ப்புகளை பெருக்கி, வறுமையை குறைக்க முடியும் என கூறப்படுகிறது.

மனித வள மேம்பாட்டை ஊக்கப்படுத்த, கல்வி, சுகாதாரம், தொழில் பயிற்சி ஆகிய துறைகளில் கவனம் செலுத்தவும் உலக வங்கி முடிவு செய்துள்ளது. அதில், சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்சினைகள், பெண்களுக்கான வேலை வாய்ப்புகள், குழந்தைகள் மேம்பாடு போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இது தொடர்பான வளர்ச்சித் திட்டங்களுக்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவிற்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குறைந்த வட்டியில், உலக வங்கி கடன் வழங்க உள்ளது.

கடனாளி நாடு நம்பர் 1

கடனாளி நாடு நம்பர் 1

2010ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த உலக வங்கியின் நிதியாண்டில், அதனிடம் அதிக அளவில் கடன் வாங்கிய ஒரே நாடு இந்தியாதான். கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவுக்கு உலக வங்கி வழங்கிய கடன் அளவு 2.2 பில்லியன் டாலர்கள் மட்டும்தான். ஆனால் அதன் பின்னர் இந்தியா இந்த அளவுக்கு கடனை வாங்கிக் குவித்து வைத்து விட்டது. 2010 ஆம் ஆண்டு 9336.3 மில்லியன் டாலர்கள் கடன் வாங்கி முதலிடத்தை பிடித்தது.

உலக வங்கியில் இந்தியா கடன்
 

உலக வங்கியில் இந்தியா கடன்

கடந்த 2010ஆம் ஜூன் மாதம் வரை வழங்கியுள்ள மொத்த கடன் தொகை 9.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட மொத்த கடனில், 2.6 பில்லியன் டாலர் வட்டி இல்லா கடனாகவும், 6.7 பில்லியன் டாலர், குறைந்த வட்டியுடன் கூடிய நீண்ட கால கடனாகவும் இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் தொகை, இந்தியாவின் வளர்ச்சி தாளாண்மைக்கு (sustain) உதவும்விதமாக மேற்கொள்ளப்படும் ஐந்து புதிய திட்டங்களுக்கு, குறிப்பாக உள்கட்டமைப்புக்கான தடைகளை களைய உதவும்விதமாக பயன்படுத்தப்படும் என்றும் அதில் உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

9.26 பில்லியன் டாலர் கடன்

9.26 பில்லியன் டாலர் கடன்

கடந்த 2010ஆம் ஆண்டு உலக வங்கியிடம் கடன் வாங்கியதில் இந்தியாவின் பங்கு 15 சதவிகிதமாகும். அடுத்த இடம் மெக்சிகோவுக்கு. அதன் அளவு 11 சதவிகிதமாகும். 3வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் கடன் அளவு 7 சதவிகிதமாகும். ஜூன் 20ம் தேதி வரை இந்தியாவுக்கு உலக வங்கி கொடுத்துள்ள கடன் தொகையின் அளவு 9.26 பில்லியன் டாலர்.

இந்தியாவிற்கு அள்ளி வழங்கும் உலக வங்கி

இந்தியாவிற்கு அள்ளி வழங்கும் உலக வங்கி

கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போதே இந்தியாவிற்கு உலக வங்கி அடுத்த 3 ஆண்டுகளில் 15 முதல் 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை கடன் வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டம், தூய்மை இந்தியா திட்டம் போன்ற பல திட்டங்களுக்கு உலக வங்கி கடன் வழங்குகிறது. மேலும், பிரத்தியேக சரக்கு போக்குவரத்து ரயில் பாதை திட்டத்துக்கும் உலக வங்கி கடனுதவி அளிக்கிறது.

உலக வங்கி கொடுத்த கடன்

உலக வங்கி கொடுத்த கடன்

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில், பல மாநிலங்களின் இயற்கை பேரழிவு சீரமைப்பு, நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி, கல்வி மேம்பாடு, விவாசாய வளர்ச்சி, சூரிய ஒளி மின்திட்டம், ஊரக வளர்ச்சி போன்றவற்றில் தொடங்கி தூய்மை இந்தியா திட்டம் வரைக்கும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் கடனாக உலக வங்கியிடம் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் வடக்கின் லூதியான முதல் கிழக்கின் கொல்கத்தா வரையிலான 1,840 கி.மீ தொலைவிற்கு சரக்கு ரயில் பாதை அமைப்பதற்கான திட்டத்திற்கு மூன்றாவது தவணையாக மட்டும் 650 மில்லியன் டாலர்களைஅக்டோபர் 2016ஆம் ஆண்டில் உலக வங்கி வழங்கியுள்ளது. இவ்வாறு பல்வேறு திட்டங்களுக்கு உலக வங்கியிடம் இந்திய கடன் பெற்றுக் கொண்டே தான் இருக்கின்றது.

கடனுக்கான வட்டி

கடனுக்கான வட்டி

இந்தியாவின் கடன் சுமை அதிகரித்ததற்கு பல காரணங்கள் உள்ளன. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக கடன் வாங்கி யுள்ளன. மத்திய அரசு கட்டமைப்பு திட்டங்களுக்காக கடன் வாங்கியுள்ளது. உணவு, எரிபொருள், உரமானியத்துக்கு இந்திய அரசு அதிகம் செலவிடுகிறது. அனைத்துக்கும் மேலாக இங்கு ராணுவத்துக்கான ஒதுக்கீடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவின் பட்ஜெட்டில் 30 சதவிகிதம் ராணுவத்துக்கு செல்கிறது. கடனுக்கான வட்டி செலுத்த 25 சதவிகிதம் போய்விடுகிறது. இதனால் சுமார் 45 சதவிகித பட்ஜெட் தொகைதான் செலவுக்கு பயன்படுத்தப்படுகிறது. கல்வி, சுகாதாரம் போன்றவைகளுக்கும் பணம் செலவிட வேண்டியுள்ளது. இது தவிர பல இடங்களில் விரயம் மற்றும் ஊழலில் பெருமளவு தொகை கரைகிறது

வாங்கிய கடன் எவ்வளவு

வாங்கிய கடன் எவ்வளவு

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் உலக வங்கியிடம் இந்தியா வாங்கியுள்ள கடன் தொகையைப் பார்த்தால் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு இந்தியா வாங்கிய கடன் தொகை 2297.1 மில்லியன் டாலர்கள். 14 திட்டங்களுக்காக கடன் வாங்கியுள்ள இந்தியா, 6வது இடத்தில் இருந்தது. 2010 ஆம் ஆண்டு அதிக கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் நம்பர் 1 இடத்தை அடைந்தது. கடந்த பட்டியலில் முன்னணியில் இருந்த இந்தியா கடந்த 2013ஆம் ஆண்டு மீண்டும் 6வது இடத்திற்கு வந்தது. 2014 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. 2017ஆம் ஆண்டு கடன் பட்டியலில் இரண்டாவது இடத்திற்குச் சென்ற இந்தியா கடந்த ஆண்டு மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

குடும்பத்தில் வரவைவிட அதிகமாக கடன் வாங்கினால் தாக்குப் பிடிக்க முடியாது. அதைப்போலத்தான் நாட்டிற்கும். நிதி ஆதாரம், திரும்ப செலுத்தும் திறன் ஆகியவற்றைப் பொறுத்தே கடன் வாங்க வேண்டும். இல்லையெனில் திவாலாக வேண்டியதுதான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India was the largest borrower from World Bank for 3 of last 4 years

World Bank assistance to India peaked in fiscal year 2010 at $9.3 billion, and help has been provided across sectors like road and power infrastructure, agriculture, health etc.Between 2009 and 2018, the bank provided assistance to India across sectors like road and power infrastructure, agriculture, health, education and disaster management, shows ThePrint’s analysis of the projects funded.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X