ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் எளிமையாகிறது - நார்மல், சகஜ், சுகம் படிவங்கள் ஏப்ரல் முதல் அமல்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி கணக்கு தாக்கல் செய்ய எளிமைப்படுத்தப்பட்டுள்ள புதிய படிவங்களை ஜிஎஸ்டி ஆணையம் வெளியிட்டுள்ளது. நார்மல், சகஜ் மற்றும் சுகம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படிவங்கள் வரும் ஏப்ரல் முதல் சோதனை முறையில் பயன்படுத்தவும், வரும் ஜூலை முதல் முழுமையாக பயன்படுத்த முடியும் என்றும் ஜிஎஸ்டி ஆணையம் தெரிவித்துள்ளது.

 


ஜிஎஸ்டி ரிட்டன் படிவங்கள் திருத்தி அமைக்கப்பட்டதால், ஜிஎஸ்டி ஆர்1, ஜிஎஸ்டி ஆர்2 மற்றும் ஜிஎஸ்டி ஆர் 3 என தனித்தனியாக தாக்கல் செய்யவேண்டியதில்லை. இதனால் கால விரயம் தவிர்க்கப்படும். அதே சமயம், வருடாந்திர கணக்கை தாக்கல் செய்ய உதவும் ஜிஎஸ்டி ஆர்9 படிவம் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றும் தெரிகிறது.


தற்போது அமலில் உள்ள கொள்முதலுக்கான ஜிஎஸ்டிஆர்2 படிவமும், உள்ளீட்டு வரி மற்றும் நிகர வரி (input & output) க்கான ஜிஎஸ்டிஆர்3 படிவமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இரண்டு படிவங்களையும் புரிந்துகொள்வதற்கு வர்த்தகர்களும் தொழில் துறையினரும் சிரமப்படுவதால் இவை இரண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி ஆணையம் விளக்கமளித்துள்ளது. ஆனால், விற்பனைக்கான ஜிஎஸ்டிஆர் 1 படிவமும் உள்ளீட்டு வரி, செலுத்தவேண்டிய நிகர வரி போன்றவற்றுக்கான ஜிஎஸ்டிஆர்3பி படிவமும் தொடர்ந்து அமலில் இருக்கும். புதிய படிவங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்ய எளிமையாக இருக்கும் என்று ஜிஎஸ்டி ஆணையம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் ஆதார் தகவலை சரிபார்க்க தனியார் நிறுவனங்களுக்கு 50 பைசா கட்டணம்

சரக்கு மற்றும் சேவை வரி

சரக்கு மற்றும் சேவை வரி

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டாலும், மாதாந்திர கொள்முதல், விற்பனை, முழு ஆண்டுக்கான விற்பனை விபரங்களை தாக்கல் செய்வதற்கான அனைத்து படிவங்களையும் தாமதமாகவே அறிமுகப்படுத்தியது. கூடவே மாதாந்திர ஜிஎஸ்டிஆர் படிவங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவையும் தளர்த்தியது.

மூன்று வித ஜிஎஸ்டிஆர் படிவங்கள்

மூன்று வித ஜிஎஸ்டிஆர் படிவங்கள்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டிஆர் படிவங்களை வர்த்தகர்களும் தொழில் துறையினரும் புரிந்துகொள்ள சிரமப்பட்டதால், அனைதது படிவங்களையும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக மாற்றி அமைக்கம்படி ஜிஎஸ்டி ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர். ஜிஎஸ்டி ஆணையமும் இவர்களின் கோரிக்கையை ஏற்று, படிப்படியாக மாற்றம் செய்துகொண்டே வந்தனர். ஆனாலும் கூட, ஜிஎஸ்டிஆர் படிவங்களை பயன்படுத்துவதில் குழப்பம் நீடித்தது. வரி நிபுணர்களும் ஜிஎஸ்டிஆர் படிவங்களை எளிமையாக மாற்றி அமைக்கும்படி கோரிக்கை வைத்தவண்ணம் இருந்தனர்.

ஜிஎஸ்டி ஆணையம்
 

ஜிஎஸ்டி ஆணையம்

ஜிஎஸ்டி ஆணையமும் வர்த்தகர்கள் மற்றும் வரி நிபுணர்களின் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி படிவங்களை எளிமையாக மாற்றி அமைக்கும் வழிமுறைகளை ஆராயந்து அறிக்கை அளிக்கும்படி வரி நிபுணர்களை கேட்டுக்கொண்டது. அவர்களும் தீவிர முயற்சி எடுத்து ஜிஎஸ்டிஆர் படிவங்களை எளிமையாக மாற்றி அமைக்கும் முறைகளை ஜிஎஸ்டி ஆணையத்திற்கு அளித்தனர்.

ஜிஎஸ்டிஆர்3 படிவமும் ரத்து

ஜிஎஸ்டிஆர்3 படிவமும் ரத்து

ஜிஎஸ்டி ஆணையமும் வரி நிபுணர்களின் ஆலோசனையை ஏற்று அதற்கேற்ப ஜிஎஸ்டிஆர் படிவங்களை எளிமையாக மாற்றி அமைத்தது. அதன்படி, தற்போது பயன்பாட்டில் உள்ள கொள்முதலுக்கான ஜிஎஸ்டிஆர்2 படிவமும், உள்ளீட்டு வரி(Input Tax) மற்றும் செலுத்தவேண்டிய வரி(Output Tax) க்கான ஜிஎஸ்டிஆர்3 படிவமும் ரத்து செய்யப்படுகிறது. ஆனால், விற்பனைக்கான ஜிஎஸ்டிஆர்1 படிவமும், மொத்த உள்ளீட்டு வரி மற்றும் செலுத்தவேண்டிய மொத்த நிகர வரிக்கான ஜிஎஸ்டிஆர்3பி படிவமும் தொடர்ந்து அமலில் இருக்கும். இவை அனைத்தும் பயன்படுத்துவதற்கும், ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவேற்றம்(Upload) செய்வதற்கும் மிக எளிமையாக இருக்கும் என்றும் ஜிஎஸ்டி ஆணையம் தெரிவித்துள்ளது.

மூன்று வித படிவங்கள்

மூன்று வித படிவங்கள்

மாற்றி அமைக்கப்பட்ட ஜிஎஸ்டிஆர் படிவங்கள் மூன்றும் முறையே நார்மல், சகஜ் மற்றும் சுகம் என அழைக்கப்படுகிறது. புதிய படிவங்கள் சிறு வர்த்தகர்களுக்கும் சுமார் ரூ. 5 கோடி வரையிலும் விற்று முதல் (Turn Over) உள்ள தொழில் நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கு எளிமையாக இருக்கும் என்று வரி நிபுணர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். புதிய படிவங்களை வரும் ஏப்ரல் முதல் சோதனை முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் வரும் ஜூலை முதல் அமலுக்கு வரும் என்றும் ஜிஎஸ்டி ஆணையம் தெரிவத்துள்ளது.

விற்பனை, கொள்முதல் விபரங்கள்

விற்பனை, கொள்முதல் விபரங்கள்

புதிய ஜிஎஸ்டிஆர் படிவங்களில் விற்பனை மற்றும் கொள்முதல் விபரங்களை எளிய முறையில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். தவறுகள் ஏற்படாமலும் தவிர்க்க முடியும். மேலும் இது ஜிஎஸ்டி வரித் துறையினருக்கு வரி முறைகேடுகளை கண்டுபிடிக்கவும் உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வர்த்தகர்களுக்கும் தொழில் துறையினருக்கும் கூடுதல் வேலைச் சுமையைக் கொடுக்கும் என்று தெரிகிறது.

விலைப்பட்டியல் விபரங்கள்

விலைப்பட்டியல் விபரங்கள்

தற்போது அமலில் உள்ள பழைய படிவங்களில் பொருட்களை அறிய உதவும் HSN விவரங்கள் 4 இலக்கங்களில் இருக்கும். திருத்தி அமைக்கப்பட்ட படிவங்களில் HSN விவரங்கள் 6 இலக்க எண்களாக இருக்கும். மேலும் புதிய படிவங்களில் பொருட்களின் விலைப்பட்டியல் விவரங்கள் (Invoices) அனைத்தும் தொடர்ச்சியாக வரும்படி அமைக்கப்பட்டுள்ளன.


தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gst ஜிஎஸ்டி
English summary

GST Returns New Forms Normal, Sahaj, Sugam introduced

The GST Council introduced New return Formats named Normal. Sahaj and Sugam would make the compliance process simpler for smallest traders and businesses, wherein taxpayers up to a turn over Rs.5 Crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X