இதுவரை பிஎஃப் செலுத்துபவர்கள் தங்கள் பழைய கணக்குகளை புதிய கணக்குகளோடு ஒவ்வொரு முறையும் இணைக்க வேண்டும். அப்படி இணைக்க ஒவ்வொரு முறையும் நம் புதிய பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டிருக்கும் அலுவலகங்களுக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
ஆனால் இனி அப்படி பழைய கணக்குகளை புதிய கணக்குகளோடு இணைக்க வேண்டாம். நம் புதிய பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டிருக்கும் பிஎஃப் அலுவலகத்துக்கோ அல்லது ஆன்லைன் முறையிலோ விண்ணப்பிக்கத் தேவையும் இல்லை.

இனி யு.ஏ.என் எண்கள் மூலம் புதிய பிஎஃப் கணக்கோடு பழைய பிஎஃப் கணக்குகளை தானே இணைத்துக் கொள்ளப் போகிறதாம். ஒரு முறை புதிய பிஎஃப் கணக்கில், நாம் புதிதாக வேலைக்குச் சேர்ந்த நிறுவனம் பணம் போட்டால் உடனடியாக யு.ஏ.எண்-ஐ வைத்து பழைய கணக்குகளையும் புதிய கணக்குகளோடு ஒப்பிட்டு, சரி பார்த்து, இதற்கு முன் நம் பழைய பிஎஃப் கணக்கில் இருக்கும் அசல் மற்றும் வட்டியோடு புதிய கணக்கில் இணைத்துவிடுவார்களாம்.
Also Read | இனி ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க முடியாது..!
தற்போது இந்த இணைப்பை ஒரு குறிப்பிட்ட அலுவலகங்களில் தொடங்கப்பட்ட பிஎஃப் கணக்குகளுக்கு மட்டும் செய்து பார்த்திருக்கிறார்களாம். எல்லாம் சரியாக நடப்பதால் இப்போது இந்தியா முழுமைக்கும் கொண்டு வந்திருக்கிறார்களாம்.
தற்போது ஒரு ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பிஎஃப் கணக்கு மாற்றங்கள் மற்றும் இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள் வருகிறதாம். அதோடு பிஎஃப் தொடர்பான 80% மேற்பட்ட சேவைகளை ஆன்லைனிலேயே கணக்குதாரர்கள் பெறுகிறார்களாம். இனியும் மீதமுள்ள 20 சதவிகித சேவைகளையும் பெரும்பாலும் ஆன்லைனிலேயே விரைவாக வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு வசதியாக இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்களாம். பிஎஃப் அலுவலகத்தை பேப்பர்கள் இல்லாத அலுவலகங்களில் ஒன்றாக மாற்ற விரும்புகிறார்களாம்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications