இந்தியா எல்லாம் எங்களுக்கு டயர் 1 நாடுகள் கிடையாது..! போட்டு உடைத்த இங்கிலாந்து..!

இங்கிலாந்து: ப்ரெக்ஸிட் பிரிவுக்குப் பிறகு இந்தியா போன்ற நாடுகள் இங்கிலாந்தின் டயர் 1 நாடுகளாக இருக்காது என மார்ச் 19, 2019 (நேற்று ) சொல்லி இருக்கிறது இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம்.

இன்னும் பிரிட்டன் பல வேலைகளை செய்து முடித்த பின் தான் இந்தியாவோடு வியாபாரம் மற்றும் வணிகத்தைப் பற்றிப் பேச முடியும் எனவும் சொல்லி இருக்கிறது இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம்.

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் (House of Commons) குளோபல் பிரிட்டன் மற்றும் இந்தியா என்கிற தலைப்பில் பேசி இருக்கிறார்கள். அப்போது பிரிட்டன் மற்றும் இந்தியா உடனான உறவு முறை பற்றியும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள் இங்கிலாந்தின் வெளியுறவு விவகாரத் துறை கமிட்டியினர்.

தீர்வு இல்லை

தீர்வு இல்லை

அப்போது இந்தியாவில் சில அதிக மதிப்பு கொண்ட வர்த்தகங்களுக்கும், பிரச்னைகளுக்கும் குறிப்பாக இங்கிலாந்து நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. இது எல்லாம் வருங்காலத்தில் நாம் எதிர் கொள்ள இருக்கும் பிரச்னைகள் என குறிப்பிட்டிருக்கிறார் இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க் ஃபீல்ட்.

அதனால் தான் டயர் 1 இல்லை

அதனால் தான் டயர் 1 இல்லை

அதனால் தான் இந்தியாவை டயர் 1 நாடுகளில் நாங்கள் குறிப்பிடவில்லை. இதற்கு அர்த்தம் இங்கிலாந்துக்கு, இந்தியா போன்ற நாடுகள் தேவை இல்லை என எடுத்துக் கொள்ள வேண்டாம். இப்போதைக்கு இந்தியா, இங்கிலாந்தின் டயர் 1 நாடுகளில் இல்லை அவ்வளவு தான் எனவும் சமாதானம் சொல்லி இருக்கிறார் மார்க் ஃபீல்ட்.

எளிதல்ல

எளிதல்ல

அதோடு "இந்தியாவில், எல்லா பிரிட்டிஷ் நிறுவனத்தாலும் எளிதில் தொழில் தொடங்கி நடத்த முடிவதில்லை. சில அதிக மதிப்புள்ள வர்த்தகப் பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. அவைகளைத் தீர்க்க சர்வதேச நீதிமன்றங்களின் தேவை இருக்கிறது. இது போன்ற பிரச்னைகளை, இந்தியா இங்கிலாந்துக்கு கொடுக்கும் எச்சரிக்கை சைகைகளாகவே தெரிகிறது எனவும் விளக்கினார்.

53 இடங்கள் முன்னேற்றம்

53 இடங்கள் முன்னேற்றம்

மார்க் ஃபீல்ட் தான் இங்கிலாந்தின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தின் ஆசிய பிராந்திய பொறுப்பாளர். இந்தியா மீது இத்தனை சந்தேகங்களை முன் வைத்து விட்டு, இந்தியா இங்கிலாந்துக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் சொல்லி விட்டு, இந்தியா பிசின்ஸ் தொடங்குவதில் 53 இடங்கள் முன்னேறி இருப்பதை சுட்டிக் காட்டி பாராட்டவும் செய்கிறார்.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

அதோடு இங்கிலாந்து மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையில் இருக்கும் பிரச்னைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் எப்போதும் குறைக்கப் படாது எனவும் சொல்லி இருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+