மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 38,452 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 222 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தக நேர முடிவில் 38,164 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது.
அதே போல் நிஃப்டி காலை 11,549 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,456 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது.
இப்படி வாரத்தின் மற்ற வர்த்தக நாட்களில் காட்டிய ஏற்றத்தை வாரத்தின் கடசி நாளில் காட்டாததைப் பார்த்து வர்த்தகர்களும் முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளின் ஏற்றத்தை சந்தேகப்படத் தொடங்கி இருக்கிறார்கள்.
சென்செக்ஸ் & பி.ஸ்.இ
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 19 பங்குகள் இறக்கத்திலும், 11 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,859 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,001 பங்குகள் ஏற்றத்திலும், 1,723 பங்குகள் இறக்கத்திலும், 135 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 2,859 பங்குகளில் 51 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 102 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 31 பங்குகள் இறக்கத்திலும், 19 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின.
செக்டோரியல் இண்டெக்ஸ்
இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ரியல் எஸ்ஏட் என இரண்டு துறை சார்ந்த பங்குகள் மட்டுமே கொஞ்சம் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மற்ற வங்கி, ஆட்டோமொபைல், ஐடி, மீடியா, பார்மா, எனர்ஜி என எல்லா துறை சார்ந்த பங்குகளுமே இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் ஹெச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ், மாருதி சுஸிகி, யெஸ் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.
ஏற்றப் பங்குகள்
ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் எண்டிபிசி,லார்சன் அண்ட் டியூப்ரோ, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஏஷியன் பெயிண்ட்ஸ், ஹிண்டால்கோ போன்ற பங்குகள் சராசரியாக 1 சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.
இறக்கப் பங்குகள்
பார்தி இன்ஃப்ராடெல், டாடா மோட்டார்ஸ், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ரிலையன்ஸ் போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 2.5 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
உலக சந்தைகள்
நேற்று மார்ச் 21, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் விலை அதிகரித்து 1.42 % அதிகரித்து வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அமெரிக்க சந்தைகள் சுமார் 1.4 சதவிகிதம் அதிகரித்திருப்பது நல்ல விஷயம் என்றாலும், இன்று மார்ச் 22, 2019-ல் அனைத்து ஐரோப்பிய சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாகின்றன. மூன்று ஐரோப்பிய சந்தைகளும் சுமார் 1 - 1.25% இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
ஆசியச் சந்தைகள்
ஆசிய பங்குச் சந்தைகளில் சிங்கப்பூரின் ஸ்ட்ரைட் டைம்ஸ் மற்றும் எஸ்ஜிஎக்ஸ் நிஃப்டி சந்தைகள் மட்டும் இறக்கம் கண்டு வர்த்தகமான சந்தை. மற்ற ஆசிய சந்தைகள் எல்லாமே கொஞ்சம் தேக்கத்திலேயே வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது 68.95 ரூபாயாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications