இந்தியா வளர்கிறது எனக் காட்டிய இந்திய சந்தைகள்..!

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 37,886 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 424 புள்ளிகள் அதிகரித்து வர்த்தக நேர முடிவில் 38,234 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது.

நேற்று சென்செக்ஸ் 37,808 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் 37,886-க்கு வர்த்தகமாகத் தொடங்கியது சுமார் 80 புள்ளிகள் கேப் அப்பில் ஓப்பனானது கூட சென்செக்ஸின் ஏற்றத்தையும் இந்திய சந்தைகளின் மீது முதலீட்டாலர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுவதாகவே பார்க்கிறார்கள் வர்த்தகர்கள்.

இருப்பினும் சென்செக்ஸ் தன் 38,386 என்கிற தன் பழைய உச்சத்தை கடந்து வர்த்தகம் நிறைவடைய வில்லை என கொஞ்சம் வருத்தத்தில் தான் இருக்கிறார்கள் இந்திய வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள்.

நிஃப்டி 50

நிஃப்டி 50

அதே போல் நிஃப்டி காலை 11,375 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,483 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,354 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை 11,375 புள்ளிகளில் 20 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது.

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 07 பங்குகள் இறக்கத்திலும், 23 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,858 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,407 பங்குகள் ஏற்றத்திலும், 1,287 பங்குகள் இறக்கத்திலும், 164 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 2,858 பங்குகளில் 42 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 125 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 12 பங்குகள் இறக்கத்திலும், 38 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின.

செக்டோரியல் இண்டெக்ஸ்

செக்டோரியல் இண்டெக்ஸ்

தகவல் தொழில்நுட்பம் துறை சார்ந்த பங்குகள் போக மீதமுள்ள அனைத்து துறை சார்ந்த பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. அதிலும் குறிப்பாக வங்கி, எனர்ஜி, மெட்டல் மற்றும் பொதுத் துறை வங்கிகள் துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்தில் வியாபாரமாயின. இன்று வர்த்தக நேரத்தில் ஹெச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், மாருதி சுஸிகி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

ஏற்றப் பங்குகள்

ஏற்றப் பங்குகள்

என்டிபிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வேதாந்தா, பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் சராசரியாக 3 சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.

இறக்கப் பங்குகள்

இறக்கப் பங்குகள்

டெக் மஹிந்திரா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், யூபிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 1.25 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

நேற்று மார்ச் 25, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் விலை 0.07% குறைந்து வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. நேற்று அமெரிக்க சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமானாலும், இன்ரு ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்திலும் ஃப்ளாட்டாகவும் வர்த்தகமாகி வருகின்றன. அனைத்து ஐரோப்பிய சந்தைகளும் சுமார் 0.10 - 0.61% ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

ஆசியச் சந்தைகள்

ஆசியச் சந்தைகள்

ஆசிய பங்குச் சந்தைகளில் சீனாவின் ஷாங்காய் காம்போசைட் மட்டும் 1.51% இறக்கத்தில் வர்த்தகமானது. சீனாவைத் தவிர மற்ற அனைத்து ஆசிய நாட்டு சந்தைகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின. ஜப்பானின் நிக்கி அதிகபட்சமாக 2.15% ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+