கோயமுத்தூர்: கடந்த ஆண்டு 2018-ல் பருவ மழைகள் பொய்த்துப் போனதன் காரணமாக ஏற்பட்ட வறட்சியின் பாதிப்பு இந்த ஆண்டும் தொடர்கிறது. கிராமப்புற வாழ்வாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. பொருளாதாரத்திலும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது.
குறிப்பாக பருப்புகள், எண்ணெய் வித்துகள் மற்றும் தானியங்கள் உற்பத்தி குறைந்துள்ளன. தமிழ் நாட்டில் மட்டும்அல்லாமல் குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகள் கடந்த ஆண்டு குறைந்ததையடுத்து உற்பத்தியும் குறைந்துள்ளது.

மழைக்குறைவு காரணமாக வெப்பம் அதிகரித்தும், இதனால் தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. இது கிராமப்புற வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்தையடுத்து மக்கள் வேறு இடங்களை நோக்கி பயணிக்க காரணமாயுள்ளது.
தென்மேற்குபருவமழை 11% பற்றாக்குறையை கண்டுள்ளது. இதோடு வட கிழக்குபருவ மழையும் வழக்கத்தை விட 31% குறைந்துள்ளது. இதனால் ஏற்கனவே கரீப் மற்றும் ராபி பருவ பயிர்களானபருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி உள்ளிட்ட பல பாதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் இந்த தாக்கம் விலையில் இதுவரை எதிரொலிக்கவில்லை என்றாலும், விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் கர்நாடகா மற்றும் மகராஷ்டிராவில் பருப்பு உற்பத்தி வெகுவாக குறைந்தே காணப்படுகிறது. குறிப்பாக குஜராத்தில் எண்ணெய் வித்துகள், அதிலும் நிலக்கடலை உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது.
இதோடு குஜராத் மற்றும் கர்நாடாகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் பருத்தியும் குறைந்துள்ளது. மேலும் மக்காச்சோளம், ஓட்ஸ் உள்ளிட்ட பல தானிய வகைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் மொத்த பகுதியில் 40% வறட்சியில் சிக்கியுள்ளது, அதிலும் குறிப்பாக 16 - 17 % கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளது என காந்தி நகரிலுள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியின் நீர்மற்றும் காலநிலை ஆய்வகத்தின் தலைவர் விமல் மிஸ்ரா கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா, கர்நாடாகா, தமிழ்நாட்டின் வடக்கு பகுதிகள், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் குஜராத் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் பல பகுதிகளில் வறட்சி கடுமையாகவும் நிலவி வருகிறது. அதிலும் மகாராஷ்டிரா நிலத்தின் சில பகுதிகளில் வறட்சி என்பது கடந்த 4 - 5 வருடங்களாகவே நிலவி வருகிறது என்றும் மிஸ்ரா கூறியுள்ளார்.
குஜராத்தின் பெரும் பகுதிகள் பருவ மழை இல்லையாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் சில மாவட்டங்களில் மழை பற்றாக்குறை 74% மாகவும், சில மாவட்டங்களில் மிகமோசமான நிலையில் 97% - மாகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மாநிலங்கள் இப்படியென்றால் கேரளா, கர்நாடகா, கொடகு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழையால் ஆறுகள் , குளங்கள் ஏரிகள் நிரம்பி வழிந்தன. மேலும் விவசாய பகுதிகளும் தண்ணீரால் மிகவும் பதிக்கப்பட்டன. ஒரு புறம் தண்ணீர் இல்லாமையால் விவாசாயம் பாதிக்கப்பட்டது, ஒருபுறம் தண்ணீரால் அழிந்தது.
வறட்சிநிவாரணம்?
இந்த கடும் வறட்சியால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டதோடு அடிப்படை வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் 6,680 கோடி ரூபாய் குறிப்பிட்டநான்கு மாநிலங்களுக்கு நிவாரணமாக அளித்துள்ளது. இதில் மகாராஷ்டிராவிற்கு ரூ.4,700 கோடியும், கர்நாடகவிற்கு 950 கோடிரூபாயும், ஆந்திராவுக்கு 900 கோடி ரூபாயும், குஜராத்துக்கு130 கோடி ரூபாயும் அளித்துள்ளது. ஆக மொத்தம் எங்க போனாலும் தமிழனோட பாடு திண்டாட்டம் தான் போலவே.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications