சந்தை ஏற இது தான் காரணமா..? இனி எது சந்தையை உயர்த்தும்..?

மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு செங்குத்தாக ஏற்றம் கண்டு வருகிறது இந்திய சந்தைகள்.

சென்செக்ஸ்30 இன்று காலை 38,208 புள்ளிகள் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது சுமாராக 38,700 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இது சுமார் 1.5% ஏற்றம்.

அதே போல நிஃப்டி 50 இண்டெக்ஸும் காலை 11,625 புள்லிகள் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது சுமார் 11620 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. சுமார் 0.33% ஏற்றம்.

கேப் அப் நல்லது

கேப் அப் நல்லது

இப்படி இரண்டு இண்டெக்ஸ்களுமே ஒரு கேப் அப்பில் தொடங்கி ஏற்றத்தில் வர்த்தகமாகி வருவது மொத்த இந்திய சந்தைகளின் ஏற்றமாகவே வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் பார்க்கிறார்கள்.

ஆசியாவிலேயே அதிகம்

ஆசியாவிலேயே அதிகம்

2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நேற்று வரையான நிலவரப்படி இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 6.5 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்திருக்கிறார்கள். சீனாவை தவிர மற்ற ஆசிய நாடுகளில் மேற்கொண்ட முதலீடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது இந்தியாவுக்கு தான் அதிக முதலீடுகள் வந்திருக்கின்றன.

சந்தை ஏற்றக் காரணிகள்

சந்தை ஏற்றக் காரணிகள்

இந்தியாவின் பணப் புழக்கமும், தேர்தல் போன்ற சில சம்பவங்களும் தான் சந்தையை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இனி வரும் கலாண்டு முடிவுகள் தான் இந்திய சந்தைகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு இந்திய பங்குச் சந்தைகளின் மீதான மதிப்பீடுகளைத் தீர்மானிக்கும் என்கிறார் சிட்ரஸ் அட்வைசர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்ஜய் சின்ஹா.

சென்செக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிலவரம்

தற்போது சென்செக்ஸில் வர்த்தகமாகும் 30 பங்குகளில் 9 பங்குகள் இறக்கத்திலும், 21 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாகின்றன. நிஃப்டி இண்டெக்ஸில் வர்த்தகமாகும் 50 பங்குகளில் 14 பங்குகள் இறக்கத்திலும், 36 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாகின்றன.

துறைகளும் பங்குகளும்

துறைகளும் பங்குகளும்

பி.எஸ்.இ-ன் 19 துறை சார்ந்த இண்டெக்ஸ்களில் 18 துறை சார்ந்த இண்டெக்ஸ்கள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. டெலிகாம் துறையின் வளர்ச்சியை அடிப்படையாக வைத்துக் கொண்டு மற்ற 17 இண்டெக்ஸ்கள் ஏற்றத்தில் தான் வர்த்தகமாகின்றன. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனப் பங்குகளின் விலை சுமாராக 3.7 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. இந்த ஏற்றம் தான் மொத்த நிஃப்டி 50 இண்டெக்ஸ் பங்குகளிலேயே இன்று அதிகமான ஏற்றமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+