டெல்லி: வருமான வரித்துறை அலுவலகங்கள், ஜிஎஸ்டி அலுவலகங்கள் என நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் அலுவலகங்கள் அனைத்துமே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30 மற்றும் 31) முழுவதும் திறந்தே இருக்கும் என நேரடி வரி வாரியமும், மறைமுக வரி வாரியங்களும் சுற்றறிக்கைகளில் சொல்லி இருக்கிறார்கள்.
2017 - 18 நிதி ஆண்டுக்கான வருமான வரிப் படிவங்களை சமர்பிக்க கடைசி தேதி மார்ச் 31, 2019. தான் ஆக 2017 - 18-ம் ஆண்டுக்கான் வரிப் படிவங்களை தவறாக தாக்கல் செய்ததற்கு புதிய வரிப் படிவங்களை தாக்கல் செய்ய, வருமான வரிப் படிவங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள 31 மார்ச் 2019 தான் கடைசி தேதி.
எனவே மார்ச் 30, 31 ஆகிய தேதிகள் விடுமுறை நாட்களாக இருக்கின்ற போதிலும் அனைத்து வரி சேவை மையங்கள் உட்பட அனைத்து வருமான வரித் துறை அலுவலகங்களும் திறந்தே இருக்கும் எனச் சொல்லி இருக்கிறது நேரடி வரி வாரியம்.
இலக்கு எவ்வளவு
சரக்கு மற்றும் சேவை வரிகள் மூலம் மத்திய அரசு 11.47 லட்சம் கோடி ரூபாயை திரட்ட இலக்கு நிர்ணயித்திருக்கிறது. நேரடி வரி வருவாய்கள் மூலம் 12 லட்சம் கோடி ரூபாய் வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிந்தது. இந்த இலக்குகள் அனைத்துமே திருத்தப்பட்ட இலக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. பியுஷ் கோயல் பிரவரி 01, 2019-ல் அறிவித்த இலக்குகள்.
இவ்வளவு தானா..?
கடந்த பிப்ரவரி 28, 2019 நிலவரப்படி ஜிஎஸ்டி வரிகளின் மூலம் 10.70 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வசூலாகி இருந்தது. அதே போல் நேரடி வரி வருவாய்கள் மார்ச் 23, 2019 நிலவரப்படியே வெறும் 10.21 லட்சம் கோடி ரூபாய் தான் வரி வசூலித்திருக்கிறார்கள்.
இலக்கை அடைய வேண்டும்
இப்போது நேரடி வரிகள் வாரியம் தனக்கு நிர்ணயித்திருக்கும் இலக்கை எப்படியாவது அடைய அதிகாரிகள் தங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் படி அறிவுறுத்தி இருக்கிறதாம். எப்படியாவது வருமான வரி இலக்கை பூர்த்தி செய்தால் தான் நிதி பற்றாக்குறையும் கட்டுப்பாட்டில் இருக்கும் என்கிற அழுத்தமும் வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கும் அமைப்பின் தலைவர்களுக்கு இருக்கிறதாம்.
ஆர்பிஐ உதவி
வரி இலக்குகளை அடைய வரி வாரியங்கள் ஒரு பக்கம் முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, அதற்கு உதவும் விதத்தில் அனைத்து வங்கிகளும் மார்ச் 30 மற்றும் 31-ம் தேதிகளில் இயங்குமாறு உத்தரவிட்டிருக்கிறது ஆர்பிஐ. ஆக வங்கிகளும் இந்த இரண்டு நாட்களில் முழு வீச்சில் இயங்குமாம்.


Click it and Unblock the Notifications